பாரதத்தின் மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஸன் பட்நாயக்குக்கு சர்வதேச விருது!

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

sudarsanpatnaik - 2026

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்ப போட்டியில் ஒடிசாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் மக்கள் விரும்பிய சிற்பத்திற்கான விருதை வென்றார்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் லிபியக் கடற்கரையில் சர்வதேச மணல் சிற்ப திருவிழா நடைபெற்றது. இதில் உலகப் புகழ்பெற்ற 15 மணல் சிற்பக் கலைஞர்கள் பங்கேற்றனர்.

ஒடிசாவைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக் இந்தப் போட்டியில் பங்கேற்றார். ஆசியாவில் இருந்து பங்கேற்ற ஒரே மணல் சிற்ப கலைஞர் இவர்தான்.

இந்தத் திருவிழாவில் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்ப்போம்; கடல்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் அவர் உருவாக்கிய மணல் சிற்பம் சிறந்த சிற்பமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

தனது சிற்பம் மக்கள் விரும்பிய சிறந்த சிற்பமாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து சுதர்சன் பட்நாயக் கூறியபோது… “கடல் மாசுபடுவதால் அதில் வாழும் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. அந்த உயிரினங்களை உண்பதன் மூலம் மனிதனும் பாதிக்கப்படுகிறான். அதை உணர்த்தும் வகையில் சிற்பத்தை உருவாக்கினேன். இதற்கு விருது கிடைத்தது பெருமை அளிக்கிறது. மாசு இல்லா உலகத்தை உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமை! இந்த விருதை நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.