திமுக தலைவர் ஸ்டாலின் அசுரன் படம் பார்த்து பாரட்டியதை அரசியல் கட்சியினர் அரசியல் ரீதியாக விமர்த்து வருகின்றனர்.
சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தனுஷ ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் பாராட்டையும் பெற்றது. எழுத்தாளர் பூமணியின் வெக்கை எனும் நாவல்தான் அசுரனாக திரைக்கு வந்தது.
அமைச்சர் ஜெயகுமார் ஸ்டாலினை விமர்சித்துள்ளார். ஜெயகுமார் கூறியதாவது, ஸ்டாலின் ஜமீந்தார் தோரனையில் அமர்ந்து படம் பார்த்துள்ளார். ஜனநாயக நாடில் அனைவரும் சமம் என்று இல்லாமல் ஜமீன்தாரராக இருந்து படத்தை பார்த்துள்ளார், அந்த படத்தில் வரும் வடக்கூரான் எனும் வில்லன் கேரக்டர்தான் ஸ்டாலினுக்கு பொருந்தும் என பேசியுள்ளார்.