நவம்பர் மாதம் திருமணம் ! மகள்கள் சம்மதம் ! மகிழ்ச்சியில் சுஷ்மிதா !

சினி நியூஸ் சினிமா

sushmitha 1 - 2026இந்தியாவில் இருந்து முதன்முதலில் உலக அழகிப் பட்டம் வென்றவர் சுஷ்மிதா சென் தற்பொழுது இவருக்கு வயது 42. இந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

திரைத்துறையை தவிர சமூகப் பணிகளிலும் சுஷ்மிதா சென் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அதற்கு உதாரணமாக ரெனி, அலிசா என்ற் இரண்டு
பெண்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.sushmitha sen - 2026இந்நிலையில்  பிரபல விளம்பர மாடல்  உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்த் ரோமன் ஷாலை (வயது 28 ) திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோமனும் சுஷ்மிதாவும்  இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். தாங்கள் டேட்டிங் செய்யும் புகைப்படங்களை, இருவரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது வெளியிடுவது வழக்கம்.susmitha sen1 - 2026இந்நிலையில் தங்களுடைய உறவை அவர்கள் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. வரும் நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு அவருடைய மகள்கள் இருவரும் சம்மதம் கூறிவிட்டதாக தெரிகிறது.sushmi sen - 2026ரோமன் அவர்களுக்கு ஏற்கனவே நல்ல அறிமுகம் என்பதால், தங்களுடைய தாய் திருமணத்துக்கு மகள்கள் கண்டிசன் ஏதும் போடவில்லையாம். இதனால் சுஷ்மிதா மகிழ்ச்சியில் இருக்கிறார். திருமண வேலைகளை ஆரம்பித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுஷ்மிதாவும், ரோமனும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியானது.  இந்நிலையில் சுஷ்மிதா – ரோமன் திருமணம் இந்த ஆண்டு நவம்பரில் நடக்கும் என செய்தி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.