மதக் கலவரத்தை தூண்டிவிட்டு… ஜாமீன் வேறு கேட்பதா?: ஆவேசமான நீதிபதி! திகைக்கும் திக.,வினர்!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

Controversial comment on Facebook Youth arrested in Kovai - 2026

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் மாட்டிறைச்சி விவகாரம் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்த திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்ட செயலாலர் நிர்மல்குமாரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சில தினங்களுக்கு முன்பு மாட்டுக்கறி சாப்பிட்டுவிட்டு அதனை படம் எடுத்து, மாட்டுகறி சாப்பிட்டால் அடித்து கொல்வாயா? how is it? இந்து மத வெறியர்களே என்று கேட்டு பதிவிட்டிருந்தார்.

இவ்வாறு மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில், மாட்டிறைச்சி குறித்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்த நிர்மல் குமார், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்துக்கு பகிரங்க சவால் விடுத்திருந்தார். இது தொடர்பாக கோவை போலீசில் புகார் அளிக்கப் பட்டது.

இதை அடுத்தது நிர்மல்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைக் கண்டித்து கோவையில் சில இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

அப்போது பேசிய தபெதிக., பொதுச் செயலாளர் கோவை ராமகிருட்டிணன், நிர்மல் குமாரை தனிமை சிறையில் அடைத்து துன்புறுத்துகின்றனர்! அதிமுக அரசு அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறது என்று பேசினார்.

இதனிடையே நிர்மல்குமாரின் ஜாமீன் மனு மீது கோவை 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

அப்போது, எதிர்தரப்பு வழக்கறிஞர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திராவிட கழக வழக்கறிஞர் திணறினார்.

மாட்டுக்கறி சாப்பிட்டால் யாரும் குற்றம் என்று சொல்லி கைது செய்யவில்லை; ஆனால், அதே நேரத்தில் அதைப்பதிந்து மதக்கலவரத்தை தூண்டும் விதமாக அழைப்பு விடுத்துள்ளார். இதே போல் இந்து அமைப்புகள் பன்றிக் கறியை சமைத்து மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்களை அழைத்தால் என்னவாகும்? அப்போது இதே பெரியாரிஸ்ட்கள் கருத்துரிமை என்று பன்றிக்கறி விருந்து குறித்து பேசுவார்களா?

தொடர்ந்து இந்து மதத்தினையும், இந்து கடவுள்களையும் திட்டமிட்டே அவமதித்து வருகிறார்கள். இப்போது மாட்டுக்கறி தின்று மதக்கலவரத்தை தூண்டுபவர்களை வெளியில் விட்டால் நாளை தமிழகத்தில் மதக்கலவரம் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று எதிர்தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஞானசம்பந்தம், நிர்மல் குமார் செய்தது குற்றமே எனக்கூறி ஜாமீனை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மதக் கலவரத்தை தூண்டிய குற்றத்துக்காக அவரை நீதிமன்ற காவலில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.