கதை திருடும் கதை ! படைப்பாளியாய் பரிணாமம் !

Published:

padapali - 2026தமிழ் சினிமாவில் கதை திருட்டு விவகாரம் பல ஆண்டுகளாக இருந்தாலும், தனது கதையை பறிகொடுத்த உதவி இயக்குநருக்கு சரியான நியாயம் கிடைத்தது என்னவோ, விஜயின் ‘சர்கார்’ பட விவகாரத்தில் தான். எழுத்தாளர் சங்கம் சார்பில் கே.பாக்யராஜ் எடுத்த அதிரடி நடவடிக்கையால், கதை திருடுபவர்கள் சற்று கதிலங்கினாலும், திருட்டு சம்பவம் மட்டும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது

தமிழ் சினிமாவில் கதை திருட்டு விவகாரம் பல ஆண்டுகளாக இருந்தாலும், தனது கதையை பறிகொடுத்த உதவி இயக்குநருக்கு சரியான நியாயம் கிடைத்தது என்னவோ, விஜயின் ‘சர்கார்’ பட விவகாரத்தில் தான். எழுத்தாளர் சங்கம் சார்பில் கே.பாக்யராஜ் எடுத்த அதிரடி நடவடிக்கையால், கதை திருடுபவர்கள் சற்று கதிலங்கினாலும், திருட்டு சம்பவம் மட்டும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது

தற்போது கூட, பாத்திபனிடம் உதவி இயக்குநராக இருந்தவருடைய கதை திருடப்பட்டு, திரைப்படமாக உருவாகி இம்மாதம் வெளியாக உள்ளது. அப்படத்திற்கு எதிராகவும் கதையாசிரியர் சங்கம் சாட்டை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இந்த நிலையில், உதவி இயக்குநர்களின் கதை திருடப்படுவதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் காரணம், என்று இயக்குநர் ஒருவர் தனது திரைப்படம் மூலம் கூற வருகிறார்.இப்போது இந்த கதை திருட்டை மையமாக வைத்து படைப்பாளன் என்ற பெயரில் ஒரு படம் தயாராகியிருக்கிறது.

ஒரு உதவி இயக்குனரின் கதையை, ஒரு கார்பரேட் நிறுவனம்  திருடி அதனை பெரிய இயக்குனரை வைத்து படமாக தயாரித்து விடுகிறது. அந்த உதவி இயக்குனர் கார்பரேட் நிறுவனத்தை அணுகி கதைக்கு உரிமை கேட்கும் போது பணத்துக்காக இப்படி பொய் சொல்வதாகக் கூறி உதவி இயக்குனரைத் தூக்கி எரிகிறது.

இதனால் கோபமடையும் அந்த உதவி இயக்குனர், அந்த கதை தன்னுடைய கதை என்று எப்படி நிரூபிக்கிறார் என்பது தான் படைப்பாளன் படத்தின் கதை. எல்.எஸ்.தியான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நட்சத்திரம் செபஸ்தியான், பிரபுலீன்பாபு, ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

எல்.எஸ்.பிரபுராஜா நாயகனாகவும் நடித்து இயக்கியும் உள்ளார். மற்றும் மனோபாலா, இயக்குனர் தருண்கோபி, ஜாக்குவார் தங்கம், காக்கா முட்டை ரமேஷ் – விக்கி, அஷ்மிதா, வளவன், ஆகியோர் நடித்துள்ளனர். வேல்முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிருபாகரன் இசை அமைத்துள்ளார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img