குரு பெயர்ச்சி பலன்கள் (2021-22): தனுசு

Published:

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022
20.11.2021 முதல் 13.04.2022 வரை

நிகழும் ப்லவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் தேதி சனிக்கிழமை இரவு 43:11:26 நாழிகைக்கு ஆங்கில வருடம் 2021, நவம்பர் மாதம், 20ம் தேதி இரவு 11:30:28 மணிக்கு குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது திருக்கணிதம் லஹரி அயனாம்ஸப்படி. கும்ப ராசியில் அவர் 13.04.2022 பிற்பகல் 03.49.47 மணி வரை சஞ்சரிக்கிறார். அதன் பின் மீன ராசியில் சஞ்சாரம்.

வாக்கிய பஞ்சாங்கம் படி 13.11.2021 ஐப்பசி மாதம் 27ம் தேதி இரவு 08.46 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்கிறார்.

அடியேன் எப்பொழுதும் லஹரி அயனாம்ஸப்படி செல்வதால் இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் 20.11.2021 முதல் 13.04.2022 வரைக்குமான பலன்களை கணித்து இருக்கிறேன்.

வெறும் 144 நாட்கள் மட்டுமே கும்பத்தில் குரு சஞ்சாரம் ஏற்கனவே 06.04.2021 முதல் 14.09.2021 வரை கும்ப ராசியில் சஞ்சரித்த பலன்கள் போன குருபெயர்ச்சியில் தெரிவித்து இருந்தோம். இனி மேற்படி 144 நாட்களுக்கான பலன்களை ஒவ்வொரு ராசிக்காரர்களும் தெரிந்து கொள்ளலாம்.

gurupeyarchi2021 2022
gurupeyarchi2021 2022

குறிப்பு 1: இந்த 144 நாட்களுக்குள் மற்ற சூரியன், செவ்வாய், புதன் சுக்ரன் ராகு கேது இவர்களின் சஞ்சாரங்களையும் கணக்கில் கொண்டு கணிக்கப்பட்ட பலன்கள்

குறிப்பு 2 : இவை பொதுப்பலன்கள். இதைக் கொண்டு தீர்மானிப்பது அவ்வளவு சரியாக இருக்காது.  ஒவ்வொருவரும் அவருடைய ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலன்கள் கேட்டுப் பெறுவது சிறந்த ஒன்று. மேலும் லக்னத்தை ஒட்டியும் பலன் சொல்லி இருப்பதால் உங்கள் லக்னம் தெரிந்தால் அதையும் சேர்த்து பார்த்துக் கொள்வது நல்லது.!

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

குருபெயர்ச்சி பலன்கள் – பரிகாரங்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1-304, D1 Block, சித்தார்த் பௌண்டேஷன்
ஐய்யஞ்சேரி மெயின்ரோடு, ஊரப்பாக்கம் – 603210
மொபைல்(வாட்ஸப்) 8056207965,
லேண்ட்லைன் : 044-35584922
Email ID : mannargudirs1960@hotmail.com


9 dhanusu

தனூர்

மூலம் 4 பாதம்,
பூராடம் 4 பாதம்,
உத்திராடம் 1ம் பாதம் முடிய):


தனுசு ராசி அன்பர்களே உங்கள் ராசிநாதன் குருபகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் அது நன்மை தருவதாக அல்ல என்றாலும் கெடுதல் இல்லை அதே நேரம் அவர் பார்வையால் 7,9,11ம் இடங்களை பார்ப்பது மிகுந்த நன்மையை தரும்

போட்டு வைத்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும் மற்ற கிரகங்களில் சனி புதன் சுக்கிரன் மற்றும் சூரிய இவர்களும் மார்ச் 2022 முதல் 11ள் வரும் கேது சஞ்சாரங்கள் நன்மை தருவதாக அமைகிறது தடைப்பட்டுப் போன திருமணம் கைகூடிவரும் 

வீடு நிலம் இவற்றில் போட்ட பணம்  தாமதம் ஆனாலும் வீடு நிலம் கைக்கு கிடைக்கும்படி செய்யும் உத்தியோகத்தில் இருந்து வந்த தடைகள் தேவையற்ற இடமாற்றம் சம்பள உயர்வு இல்லாமை இவை அனைத்தும் நீங்கி விரும்பிய இடமாற்றம் கேட்ட பதவி சம்பள உயர்வு எல்லாம் கிடைத்து பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

அதேபோல் சொந்தத் தொழில் செய்வோருக்கு  தொழில் விரிவாக்கத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி மீண்டும் தொழில் முன்னேற்றம் அடையும் விரிவாக்கம் நன்றாக இருக்கும் அதனால் பணவரத்து கூடும் பொதுவில் தடைகள் அகன்று முயற்சிகள் வெற்றி பெறும் அனைத்து பிரிவினருக்கும் நன்மைகள் அதிகம் நடக்கும் அதேநேரம் சில செலவுகள் ஏற்படும் உறவுகளால் நண்பர்களால் மன வருத்தம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது பொறுமை அவசியம் நிதானம் அவசியம் கடந்த காலத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் அவப்பெயர் ஏற்பட்டு அது தற்போது நீங்கிவிடும்

இந்த குருபெயர்ச்சி பெரும்பாலும் சாதகமாகவே இருக்கிறது சில ஆரோக்கிய பாதிப்புகளை தவிர அதேபோல் சில மனவருத்தங்கள் தவிர வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவீர்கள். விருந்து கேளிக்கைகள், புனித யாத்திரைகள் என செல்வீர்கள்.

குடும்பம் : கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும் கடந்தகால மனவருத்தங்கள் நீங்கும் புரிதல் நன்றாக இருக்கும் அதேபோல் பெற்றோர்கள் பிள்ளைகள் சகோதர வகை இப்படி எல்லா உறவுகளும் நெருக்கம் அதிகரிக்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும் விட்டுக் கொடுத்து செல்லும் நிலையும் இருக்கும் அதேபோல் இல்லத்தில் சுப விரயங்கள் அதாவது திருமணம் குழந்தை பாக்கியம் வீடு வாகன யோகம் யாத்திரைகள் தெய்வ தரிசனம் கேளிக்கைகள் என்று சுவரில் இருந்து கொண்டிருக்கும் பொதுவில் சில மன வருத்தங்கள் இருந்தாலும் பெரும்பாலும் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.15 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

ஆரோக்கியம் : தோல் உன் போன்ற சில வியாதிகளால் அவ்வப்போது அவற்றை பட்டுக்கொண்டு இருப்பீர்கள் அது வரும் மார்ச் மாதம் சரியாகும் மார்ச்சில் ராகு ஐந்தில் வருவது குத்தினால் மருத்துவ செலவை உண்டாக்கக் கூடும் மேலும் வாழ்க்கை துணைவர் மூலமும் சில எதிர்பாராத வைத்தியச் செலவுகள் உண்டாகும் பொதுவில் பெரிய அளவில் இந்த வைத்திய செலவுகள் இல்லை என்றாலும் நண்பர்கள் உறவுகளால் ஏற்படும் மன வருத்தங்கள் உடல் பாதிப்பை தரும் அதனால் நிதானமாகவும் சரியான சிகிச்சை தியானப் பயிற்சி இறைநம்பிக்கை இவற்றை மேற்க்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : உறையூர் வெக்காளியம்மன் மற்றும் குலதெய்வம் வழிபாடு நன்மை தரும் அருகிலுள்ள அம்மன் துர்க்கை நரசிம்மர் போன்ற கோயில்களுக்கு சென்று விளக்கேற்றி தெய்வ நாமத்தைச் சொல்லி வழிபடுவது நன்மை தரும் முடிந்த அளவு கல்வி தானம் ஆடை தானம் செய்வதும் பசித்தோர்க்கு பசுபக்ஷிகளுக்கு உணவிடுவது நன்மை பயக்கும் 

Related articles

Recent articles

spot_img