2019 வருட ராசிபலன்: கும்பம்

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
(01.01.2019 முதல் 31.12.2019 வரை)


கன்னி லக்னத்தில் வருடம் பிறக்கிறது. ஸ்வாதி நக்ஷத்திரம் துலாம் ராசியில் பிறக்கிறது.  ராகு கடக ராசியில் மார்ச் 09, 2019 வரை சஞ்சரித்து அதன் பின் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அதே போன்று கேது மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இந்த 2019 வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். குரு விருச்சிக ராசியில் மார்ச் 27, 2019 வரை சஞ்சரிப்பார். அதன் பின் தனுசு ராசிக்கு அதி சாரமாக பெயர்ச்சியாகி, வக்கிர கதி அடைந்து மீண்டும் விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 25, 2019 அன்று வந்து விடுகிறார். குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து, பின் தனுசு ராசிக்கு நவம்பர் ௦4, 2019 அன்று இடப்பெயர்ச்சி ஆகிறார். 

கும்ப ராசி (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,23 பாதம் முடிய) :

kumbham rasi - 2026

கடந்த வருடத்தை போல இந்த வருடமும் மிக சிறப்பான பலன்களை பெறுவீர்கள். இருந்தாலும் பத்தில் இருக்கும் குருவால் உத்தியோகத்தில் தொழிலில் சிறு சிறு பிரச்சனைகள் வரும் சமாளித்துவிடுவீர்கள், லாபத்தில் இருக்கும் ராசிநாதன் சனி அதிக நன்மை செய்கிறார். மேலும் மார்ச் முதல் ராகு பூர்வ புண்யஸ்தானத்திலும், கேது லாபத்தில் வருவதால் குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். ஏதேனும் வழக்குகள் தகறாருகள் இருந்தால் அவை சாதகமாக முடியும். பொதுவில் நன்றாக இருந்தாலும் மற்ற கிரஹ சஞ்சாரங்களை கணக்கில் கொண்டு எதையும் ஒருதடவைக்கு இருதடவை யோசித்து முடிவெடுக்கவும்.

உடல் ஆரோக்கியம்:

ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும் பத்தில் இருக்கும் குருவால் பயம் பதட்டம் இருந்து கொண்டே இருக்கும். கடவுள் ப்ரார்த்தனை தியான பயிற்சிகள் மூலம் இதை சரிசெய்யலாம். ராகு 5ல் வருவதால் குழப்பங்கள் ஏற்படும். மஹாதசை பலவீனமாக இருந்தால் உங்களுக்கோ அல்லது உறவுகளுக்கோ கொஞ்சமாக உடல் பாதிப்புகள் ஏற்படலாம். மருத்துவ ஆலோசனை படி நடப்பது நலம் தரும். பெரியதாக உடல் பாதிப்புகள் ஏற்படாது என்பதை உறுதியாக சொல்லலாம்.

உறவுகள்:

பெற்றோர், மனைவி/கணவர், சகோதரர், குழந்தைகள் என்று எல்லோரும் மகிழ்ச்சியை தருவர். ஏப்ரல் வரை குருவால் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும் ஏப்ரல் – செப்டம்பர் வரையில் நல்ல நிலை இருக்கும். பிள்ளை/பெண்ணுக்கு திருமண ஏற்பாட்டை செய்வீர்கள். இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். தொழில் நிமித்தமாக சிலருக்கு தற்காலிக பிரிவு ஏற்படலாம். குடும்ப அங்கத்தினர்கள் உங்கள் பேச்சை மதிப்பர். அக்டோபர் 2019 முதல் கொஞ்சம் சச்சரவுகள் இருக்கலாம். கவனத்துடன் செயல்பட்டால் சரிசெய்யலாம்.

உத்தியோகம்:

சனிபகவான் மற்றும் கேது பகவான் லாபத்தில் இருந்து மிக சிறந்த பலனை தருவர், எனினும் 10ல் குரு சஞ்சரிப்பது சற்று பலவீனமானது. வேலை பளுவை அதிகரிக்க செய்யும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை பதவி உயர்வு சம்பள உயர்வு, பிடித்த இடமாற்றம் என்று நன்றாகவே இருக்கும். வேலையிலும் அதிகம் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். வருட கடைசியில் கொஞ்சம் வேலை பளு மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இன்மை மேலதிகாரி மூலம் மன அழுத்தம் என்று இருக்கும். கவனம் தேவை.

தொழில்/வியாபாரம்:

குரு 10ல் இருப்பதால் தொழிலில் பலவீனம் இருக்கும். சனியால் லாபம் உண்டானாலும் குரு கொஞ்சம் சங்கடங்களை தருவார். மனைவி/கணவர் பெயரில் தொழிலை தொடர்ந்து நடத்துவதும் ஒரு ரிஸ்க் தான். ஏப்ரல் முதல் குருவும் லாபத்தில் வருவதால் சிறப்பான நிலை உண்டாகும். புதிய தொழில் விஸ்தரிப்பும் வங்கி கடன் எளிதில் கிடைப்பதும், கூட்டு தொழிலில் முன்னேற்றமும் இருக்கும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்வது அக்டோபர் 2019க்கு பின் உதவும்.

கலைஞர்கள்:

சனி மற்றும் கேதுவின் சஞ்சாரம் அனைவருக்கும் உத்வேகத்தையும் புதிய வாய்ப்புகளால் மகிழ்ச்சியையும் வருமானத்தையும் கொடுக்கும். எனினும் குருபகவான் 10ல் சஞ்சரிப்பது கொஞ்சம் பின்னடைவை தரும். இருந்தாலும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும் பின் நவம்பர் 4 முதலும் நல்ல சூழல் அதிகப்படி வருமானம், புதிய வாய்ப்புகள் பெருகுதல் போன்றவை இருக்கும்.

அரசியல்வாதிகள்:

கட்சி மேலிடத்தில் நல்ல பெயர் இருக்கும், தொண்டர்களிடம் செல்வாக்கு உயரும் பண புழக்கம் தாராளம் தேர்தலில் நின்றால் வெற்றி நிச்சயம். எனினும் குரு 10 இருப்பதால் பெயருக்கு களங்கம் வரும்படியான செயல்கள் நடக்கும். நவம்பர் 4க்கு பின் உயர்ந்த நிலைக்கு செல்லலாம். இந்தவருடம் நன்றாகவே இருக்கிறது.

மாணவர்கள்:

செப்டம்பர் 2019 வரை குரு நல்ல நிலையில் இல்லாததால் படிப்பில் கவனம் சிதறல் உண்டாகும். அதிக அக்கறை எடுத்து படிக்க வேண்டும். நண்பர்களால் பிரச்சனை உண்டாகும். நல்ல மதிப்பெண்களை பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சனி பகவான் நல்ல நிலையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். நவம்பர் 4க்கு பின் படிப்பில் நல்ல நிலை தோன்றும்.

விவசாயிகள்:

புதிய பணப்பயிர்கள் மூலம் லாபம் உண்டாகும், விளைச்சல் அதிகரித்து வருமானம் பெருகும். இருந்தாலும் 10ல் குரு கால்நடைமூலம் அல்லது புதிய முயற்சிகள் செய்வதன் மூலம் செலவை உண்டாக்குவார். சனி, கேது சஞ்சாரத்தால் மற்றும் செவ்வாயின் நிலை இவற்றால் எதையும் சமாளித்து நல்ல நிலையை உண்டாக்கி கொள்வீர்கள். புதிய முயற்சிகளை வருட கடைசியில் வைத்து கொள்ளவும். வழக்குகள் சாதக நிலை உண்டாகும்.

பெண்கள்:

சிறப்பான வருடம் என சொல்லலாம். சனி கேது இணைவு மற்றும் வருட ஆரம்பத்தில் செவ்வாயின் நிலை இவற்றால் அதிக மகிழ்ச்சி குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும், பிள்ளைகள் சொல்பேச்சு கேட்பர். பத்தில் குரு இருப்பதால் உறவுகளுக்கிடையில் சிறு சிறு பிரச்சனை உண்டாகும். இருந்தாலும் சனியால் அதையும் சமாளித்துவிடுவீர்கள். உழைக்கும் மகளிருக்கு தேவை பூர்த்தியாகும். வேலை பளு குறையும். விரும்பிய இடமாற்றம் உண்டாகும்.

வணங்கவேண்டிய தெய்வமும் ப்ரார்த்தனைகளும்:

மகாலக்ஷ்மியை வணங்க வேண்டும், லக்ஷ்மி அஷ்டோத்திரம் போன்றவை சொல்லலாம், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வணங்கி ராமநாமத்தை சொல்வதும் நன்மை தரும். அன்னதானம் செய்யுங்கள்.

.வருட பலன்கள்-2019 கணித்து வழங்குபவர்… 
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories