ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
(01.01.2019 முதல் 31.12.2019 வரை)
கன்னி லக்னத்தில் வருடம் பிறக்கிறது. ஸ்வாதி நக்ஷத்திரம் துலாம் ராசியில் பிறக்கிறது. ராகு கடக ராசியில் மார்ச் 09, 2019 வரை சஞ்சரித்து அதன் பின் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அதே போன்று கேது மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இந்த 2019 வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். குரு விருச்சிக ராசியில் மார்ச் 27, 2019 வரை சஞ்சரிப்பார். அதன் பின் தனுசு ராசிக்கு அதி சாரமாக பெயர்ச்சியாகி, வக்கிர கதி அடைந்து மீண்டும் விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 25, 2019 அன்று வந்து விடுகிறார். குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து, பின் தனுசு ராசிக்கு நவம்பர் ௦4, 2019 அன்று இடப்பெயர்ச்சி ஆகிறார்.
மகர ராசி (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 பாதம் முடிய) :

வருட ஆரம்பத்தில் செவ்வாய் 3ம் வீட்டில இருக்கிறார். குரு 11ல் லாபத்தில் இருக்கிறார் இதனால் மகிழ்ச்சி பெருகி இருக்கும். மார்ச் 2019க்கு பின் ராகு 6லும் கேது 12ல் இருப்பதால் இன்னும் வளர்ச்சியை கொடுத்து நல்ல சூழலை உருவாக்கும். ஏழரை சனியின் தாக்கம் அக்டோபர் 2019 வரை இருக்காது உங்களுக்கு வருட கடைசியில் 3மாதங்கள் மிகுந்த சோதனையை கொடுக்கும். ஆனால் பொதுவா இந்த வருடத்தில் பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் தொழிலில் நல்ல நிலை இருக்கும். சனிபகவானால் உருவாகும் தடைகள் அனைத்தும் குருபகவானால் விலகி பெரிய சந்தோஷத்தை தரும்.
உடல் ஆரோக்கியம்:
குரு லாபத்தில் இருப்பதாலும், ராகு 6ம் இடத்துக்கு வருவதாலும் உடல் ஆரோக்கியம் மேம்படும். இதுவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறைந்து, உடலில் தெம்பை கொடுக்கும். அறுவை சிகிச்சை போல் செய்வதாயிருந்தால் செப்டம்பர் 2019க்குள் செய்து கொள்ளுங்கள், குடும்பத்தினருடைய ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். அக்டோபர் 2019 முதல் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவைப்படும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நலத்திலும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவ ஆலோசனைப்படி நடப்பது நல்லது.
உறவுகள்:
குரு பூர்வபுண்ய ஸ்தானத்தையும் களத்திர ஸ்தானத்தையும் பார்ப்பதால் கணவன் மனைவிக்குள் அதிக மகிழ்ச்சி இருக்கும். வருடத்தில் முதல் 9மாதம் வரை பெற்றோர்கள், சகோதரவகை கணவர்/மனைவி வழி உறவினர்கள், பிள்ளைகள் எல்லோருடனும் நெருக்கம் இருக்கும், புத்துணர்வு ஏற்படும், உங்கள் மரியாதை உயரும் பெண்ணுக்கு/பிள்ளைக்கு திருமண ஏற்பாட்டை செய்வீர்கள் புதிய உறவின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அக்டோபர் 2019 முதல் உறவுக்குள் சிறு சிறு பூசல் வரும் வீண் விவாதத்தை தவிர்ப்பது அமைதியாக செல்வது விட்டுக்கொடுப்பது போன்றவற்றால் பெரிய பாதிப்புகள் வராது.
உத்தியோகம்:
உத்தியோகத்தில் சிறப்பான நிலை குருவாலும், 6ம் இடத்துக்கு வரும் ராகுவாலும் உண்டாகும், உங்களின் புதிய மாற்றம் அல்லது புதிய வேலை உங்கள் நிலையை உயர்த்தும். கோரிக்கைகள் செப்டம்பர் 2019க்குள் நிறைவேறும். வேலை தேடிக்கொண்டிருப்போருக்கு உடன் வேலை கிடைத்து அதில் உங்கள் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு இப்போது வந்து சேரும். சனியால் சிறு சிறு பிரச்சனை வந்தாலும் லாபத்தில் குரு உங்களை காப்பாற்றுவார். அக்டோபர் 2019 முதல் கொஞ்சம் சிரமம், திடீர் வேலை மாற்றம், சிரம ஜீவனம் ஏற்பட வாய்ப்புண்டு ஏழரை சனி இப்போது படுத்த ஆரம்பிக்கும். கவனம் தேவை.
தொழில்/வியாபாரம்:
நல்ல மாற்றங்களை கொண்டுவரும் வருடமாக அமைகிறது. புதிய உத்வேகம் தொழிலில் வளர்ச்சி, வருமானம் அதிகரித்தல், கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பு, எதிரிகள் பலம் அழிதல் போன்றவையும், கஸ்டமர் பெரிய ஆர்டர்களை தரும் நிகழ்வும் நடக்கும். தொழில் விஸ்தரிப்பை ஜனன ஜாதகத்தை பார்த்து செய்ய வேண்டும். புது தொழிலாளர்களை எடுக்கலாம் இருந்தாலும் ஏழரை சனியின் தாக்கம் இருப்பதால் கவனம் தேவை கடைசி 3 மாதம் கொஞ்சம் சிரமம், நிதானமாக செயல்பட வேண்டும்.
கலைஞர்கள்:
திரைத்துறையினர், மீடியாவில் இருப்போருக்கு வருடம் துவக்கம் நல்லபடியாக இருக்கிறது. செப்டம்பர் 2019 வரை நல்ல வளர்ச்சி இருக்கும், மற்ற கலைஞர்களும் இந்த வருடத்தில் நல்ல நிலையை பெறுவர் புது ஒப்பந்தங்கள் வருமானத்தை அதிகரிக்க செய்யும். சேமிக்கும் பழக்கத்தை கொள்ள வேண்டும். அது வருட கடைசி 3 மாதங்களுக்கு உதவும். விருது பாராட்டு கிடைக்கும். அக்டோபர் 2019 முதல் கொஞ்சம் சிரமதசை என்பதால் எதிலும் கவனமாயிருத்தல் நல்லது.
அரசியல்வாதிகள்:
புதுமனை புகும் யோகம், தொண்டர்களிடத்திலும் மக்களிடத்திலும் செல்வாக்கு அதிகரிக்கும். பதவி தேடி வரும், பண புழக்கம் தாராளம், தேர்தலில் நின்றால் வெற்றி பெறுவீர்கள், ஆளும் கட்சியில் சேர்ந்தால் நல்ல நிலை இருக்கும். அக்டோபர் 2019 முதல் புகழ் மங்கும்படியான சம்பவங்கள் வருமான வரி துறை அல்லது அரசாங்கத்தின் கோபம் போன்றவற்றால் பாதிப்புகள் உண்டாகும். அதிக கவனத்துடன் செயல்படுவது நல்லது.
மாணவர்கள்:
கடந்தகாலத்தில் செய்த தவறுகளை திருத்தி நல்ல நிலையில் படிப்பை தொடருவீர்கள். வெளிநாட்டு படிப்பு எண்ணம் கைகூடும். நல்ல நண்பர்களாலும், ஆசிரியர் பெற்றோர் ஆலோசனையாலும் படிப்பில் உயர்ந்த நிலை ஏற்படும். போட்டி பந்தயங்களில் வெற்றி தேடி வரும். அக்டோபர் 19முதல் அதிக அக்கறை எடுத்து படிக்க வேண்டும்.
விவசாயிகள்:
எதிர்பார்த்த விளைச்சல் வந்து வருமானம் பெருகும். கால்நடைகள் மூலமும் லாபம் வரும் புது பயிர்சாகுபடியும் நல்ல பலனை தரும் செப்டம்பருக்குள் வழக்குகளில் சாதக நிலை உண்டாகி வெற்றிதரும். புதிய நிலம் வாங்குவீர்கள் இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். அக்டோபர் 2019 முதல் கொஞ்சம் பின்னடைவு ஏற்படும் கவனம் தேவை.
பெண்கள்:
மகிழ்ச்சியான வருட ஆரம்பம். இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும், உறவுகளுடன் நெருக்கம் அதிகம் ஆகும், கணவன்/மனைவிக்குள் அந்யோன்யம் இருக்கும். பிள்ளைகள் சொல்பேச்சு கேட்பர், சமூக அந்தஸ்து கூடும், புனித யாத்திரை, குடும்பத்தினருடன் கேளிக்கைகள் என்று இருப்பீர்கள். அக்டோபர் 2019 முதல் கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும் விவாதங்களை தவிர்ப்பது நலம் தரும். உழைக்கும் மகளிருக்கு விரும்பிய அனைத்தும் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சந்தோஷம் பெருகும்.
வணங்கவேண்டிய தெய்வமும், ப்ரார்த்தனைகளும்:
இஷ்ட தெய்வம் அல்லது நரசிம்மரை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள் இந்த ஆண்டு அதிக நன்மை உண்டாவதால் ஸ்வாதியில் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் நரசிம்மர் கோவிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள், அன்னதானம் செய்யுங்கள். முதியோர் ஊனமுற்றோருக்கு சரீர ஒத்தாசை செய்யுங்கள்
.வருட பலன்கள்-2019 கணித்து வழங்குபவர்…
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
FG,II block , Alsa Green Park ஹஸ்தினாபுரம் மெயின் ரோடு நேரு நகர், குரோம்பேட்டை, Near MIT Gate Phone : 044-22230808
Skype / Whats app : 8056207965
Email.: mannargudirs1960@gmail.com
Contact Timings for fixing appointment –
6 AM to 8 AM & 8.30 PM to 10 PM



