spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeராசி பலன்கள்வருட ராசி பலன்கள்தமிழ்ப் புத்தாண்டு (பிலவ | 2021-22) ராசிபலன்: ரிஷபம்

தமிழ்ப் புத்தாண்டு (பிலவ | 2021-22) ராசிபலன்: ரிஷபம்

- Advertisement -
new year palangal 2021

தமிழ்ப் புத்தாண்டு
(பிலவ ஆண்டு) ராசிபலன்கள்

சூரிய பகவான் வரும் 14.04.2021 நள்ளிரவு 02.24.22க்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். அது முதல் புது வருடம் பிறக்கிறது. 14.04.2022 காலை 08.32.57 முதல் சுபகிருது தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும்.

இந்த பிலவ ஆண்டில், வரும் ஓர் ஆண்டுக்குமான ராசி பலன்கள் இங்கே தரப் பட்டுள்ளன.

2021 new year signs

பிலவ வருட வெண்பா:

பிலவத்தின் மாரிகொஞ்சம் பீடை மிகுராசர்
சலமிகுதி துன்பந் தரும் நலமில்லை
நாலுகால் சீவனெல்லாம் நாசமாம் வேளாண்மை
பாலுமின்றி செய்புவனம் பாழ்

பலன்: பிலவ ஆண்டில் மழையின் அளவு மிகக் குறைவு, கெடுதல் அதிகம், அரசர்களால் துன்பம் நேரிடும், நன்மை என்பதே இவ்வுலகில் விளையாது. கால்நடைகள் நாசமாகும் வேளாண்மைத் தொழிலும் நடக்காது. பால்வளம் குறையும்.

குறிப்பு: சமீபத்தில் கும்பத்தில் பெயர்ச்சியான குரு பகவானின் சஞ்சாரங்கள் மற்றும் சனி பகவான் சஞ்சாரங்கள், வருட கடைசியில் ராகு-கேது பெயர்ச்சி மற்ற கிரஹங்களின் மாதாந்தர சஞ்சாரங்கள் இவற்றைக் கணக்கில் கொண்டு, மூன்று பிரிவுகளாகக் கொண்டு பலன்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

சித்திரை முதல் ஆடி வரை, ஆவணி முதல் கார்த்திகை வரை, மார்கழி முதல் பங்குனி வரை எனப் பிரித்தும், பங்குனி ஆரம்பத்தில் ராகு-கேது மேஷம் துலாத்திற்கும், பங்குனி கடைசியில் குருபகவான் மீனத்துக்கும் மாறுவதையும் கருத்தில் கொண்டும் பலன்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

வருட வெண்பாவில் கூறப்பட்டிருக்கும் பலன் சுமார் என்று சொல்லப் பட்டாலும் கிரஹ நிலைகள் நன்மை தருவதாக இருப்பதால் கவலைப்பட வேண்டியதில்லை!

ravisarangan

புத்தாண்டு பலன்கள் கணிப்பு:
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர்,
ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : [email protected]


2 rishapam
2 rishapam

ரிஷபம் : (கிருத்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி 4பாதம், மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய) :

சித்திரை – ஆடி வரையில் : உங்கள் ராசிநாதன் சூரியனுடன் 12ல் தொடங்கி சஞ்சாரம். இது ஓரளவு நன்மை தரும் எனினும், சூரியனும் உடல் பாதிப்பை தருவதால் கலந்து கட்டியது போலே வருடம் முழுவதும் இருக்கும்.

பணவரவு தாராளம், நினைத்தது நிறைவேறல் என்று இருக்கும் ஆடிமாதம் வரையில் பரவாயில்லை.

பெற்றோர் வழியில் மருத்துவ செலவு இருக்கும். உத்தியோகத்தில் கடும் முயற்சி ஓரளவே பலன் தரும். குடும்பத்தை விட்டு பிரிய வேண்டி இருக்கும் உத்தியோக மாற்றத்தினால். அதே நேரம் குரு பார்வை இருப்பதால் ஜீவனம் கெடாது.

சொந்த தொழில் செய்வோர் அனைவரும் கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொண்டால் பிரச்சனைகள் அரசு மூலம் வரும் தொந்தரவுகளை தவிர்க்கலாம். சேமிக்க தொடங்குங்கள். பொதுவில் அனைத்து பிரிவினருக்கும் இந்த நான்கு மாதங்கள் மிக நன்றாகவே இருக்கும். பெரிய கஷ்டங்கள் இல்லை.

யோசித்து செயல்படுவது நன்மை தரும். புதிய வீடு குடிபோகும் யோகம் வாகன யோகம் என்றும், இல்லத்தில் எதிர்பார்த்த திருமண சுப நிகழ்வுகள் உண்டாகும். குழந்தை பேறு சிலருக்கு உண்டாகும். வெளிநாட்டு/ வெளி மாநில வாழ்க்கை சிலருக்கு உண்டாகும்.

ஆவணி முதல் கார்த்திகை வரையில்: இந்த நான்கு மாதங்கள் கொஞ்சம் கவனமாக இருத்தல் நலம் தரும். அவசரப்படுதல் கூடாது குறிப்பாக செவ்வாய், ராகு & கேது 14.11.21 வரை எதிர்பாராத தொல்லை மனதில் தேவையற்ற பயம் அவசரப்படுதல் என்றும். வழக்குகள் போன்றவற்றை சந்திக்கும் நிலை இப்படி பணவிரயம் என்று இருக்கும். 17.10.21 – 16.11.21 வரை சூரியன் சஞ்சாரமும் அரசாங்க தொல்லை என இருக்கும். கொஞ்சம் கவனம் தேவை குருவின் பார்வை 2,4,6 என்று இருப்பதால் பணம், சுகம், வீடு, ஆரோக்கியம் இவற்றுக்கு குறைவு வராது. இருந்தாலும் கொஞ்சம் நிதானித்து யோசனையுடன் எதிலும் செயல்படுவது நன்மை தரும். வீடு, நிலம் போன்ற பிரச்சனைகளில் யோசித்து செயல்படுவது அதேபோல் தேவைக்காக கடன்வாங்கும்போதும் அல்லது ஆடம்பரத்துக்காக கடன் வாங்கும் போதும் கவனம் தேவை அதே போல் நண்பர்களாலும் உறவுகளாலும் பண ரீதியான தொல்லை வரலாம். மற்றபடி ஜீவனம் வந்து கொண்டிருக்கும். பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. திருமணம் குழந்தை போன்ற இனங்களால் சுப விரயங்கள் ஏற்பட்டு மகிழ்ச்சியை தரும். தடை பட்ட திருமணம் அமையும், குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தோருக்கு கிட்டும். ராகுவால் பிரயாணம் சில தொந்தரவுகளை தரும். பொதுவில் நன்மை தீமை கலந்து இருக்கும். மருத்துவ செலவுகள் இருக்கும். உடல் ஆரோக்கியம் குடும்ப அங்கத்தினர் உட்பட பாதிப்பு இருக்கலாம்.

மார்கழி முதல் பங்குனி வரையில்: சனி பகவான் கருணை, ராகு கேத் & குருவின் வருட கடைசி பெயர்ச்சி இவை ஓரளவு நன்மை தரும். குருவால் லாபம் உண்டாகும். ராகு சுப செலவுகளை தரும். முன்பு செய்த முயற்சிகள் நிறைவேறும். பெரும்பாலும் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். புதுவீடு யோகம், வாகன யோகம், தேங்கியிருந்த வழக்குகள் வெற்றி தருதல், பிள்ளைகளால் பெருமை, உத்தியோகத்தில் நல்ல நிலை, விரும்பிய இடமாற்றம், தெய்வ அனுகூலம், தீர்த்த யாத்திரைகள், இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள், புது வரவுகளால் குடும்பத்தில் ஒற்றுமை, மன மகிழ்ச்சி அதிகரித்தல் விருந்து கேளிக்கைகள் அரசு மூலம் ஆதாயம், சொந்த தொழில் செய்வோர், அனைத்து பிரிவினர்களுக்கும் எதிர்பார்த்த தேவைகள் பூர்த்தியாகுதல், வங்கி கடன் கிடைத்தல், உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் மருத்துவ செலவுகள் குறைதல் என நன்றாகவே இருக்கும். அடுத்து தொடங்கும் ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும். சேமிக்கும் வழக்கம் இருந்தால் பண ரீதியான பிரச்சனைகளை சமாளித்துவிடுவீர்கள். எதிரிகள் மறைவர், பொதுவாக அனைவருக்கும் நன்மை அதிகம் இருக்கும். துன்பங்கள் குறைவு.

 ப்ரார்த்தனைகள் : நன்மை அதிகம் இருப்பதாலும், ஆவணி முதல் கார்த்திகை வரையும் கூட கொஞ்சம் கவனமாயிருந்து ஆலோசித்து நடந்தால் பெரும் துன்பங்கள் இல்லை. குருப்பெயர்ச்சிக்கு சொன்ன அதே ப்ரார்த்தனைகள். வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் ஆலயங்கள் சென்று விளக்கேற்றி வழிபடுவது மற்றும் குல தெய்வ வழிபாடு நன்மை தரும், முடிந்த அளவு தான தர்மங்களை செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe