producer counsil 1 - 2026

மார்ச் 15ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது போல் படபிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டு , வேலை நிறுத்தம் ( Industry shutdown ) தமிழகம் முழுவதும் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதே போல் வருகிற 23 தேதி நள்ளிரவு 12 மணி முதல் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெறும் படபிடிப்புகளின் படபிடிப்பு நிறுத்தப்பட்டு. மார்ச் 22ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் நடைபெறும் படபிடிப்புகள் நிறுத்தப்பட்டு அனைவரும் இந்த காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வர். இந்த முடிவை நேற்று சென்னையில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒருமனதோடு எடுத்துள்ளனர்.

இக்கூட்டத்தில் கதிரேசன் , துரைராஜ் , S.R. பிரபு , தாணு , S.A.சந்திரசேகர் , R.K.செல்வமணி , T.சிவா , எடிட்டர் மோகன் , A.L. அழகப்பன் , ராஜன் , TG தியாகராஜன் , சுந்தர்.C , பாண்டிராஜ் , மைகேல் ராயப்பன் , தங்கர்பச்சன் , R.D.ராஜா , A.L. உதயா ,கபார் , P.L. தேனப்பன் , அருண்விஜய் , S.மதன் , வெங்கட் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending