தன் மகள் நடிப்பது குறித்து நடிகை கௌதமி சொன்ன பதில் !

Published:

kamal hassan gautami subbulakshmi - 2026

தனது மகள் சுபலட்சுமி சினிமாவில் நடிக்கவுள்ளதாக பரவி வரும் தகவலுக்கு விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை கௌதமி. ‘என் மகள் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை’ என அவர் கூறியுள்ளார்.

தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படம் தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்யப் பட்டு வருகிறது. இந்தப் படத்தை பாலா இயக்குகிறார். இந்தப் படத்துக்கு, ‘ஜோக்கர்’ ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். விக்ரம் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.

துருவ் விக்ர்ரமுக்கு ஜோடியாக நடிகை கௌதமி மகள் சுபலட்சுமி நடிப்பதாக அண்மையில் செய்திகள் பரபரப்பாக வெளியாயின. ஆனால் இந்தச் செய்திகளை மறுத்துள்ளார் நடிகை கௌதமி.

 

“என் மகள் நடிக்கப் போவதாக வெளியான செய்திகளைப் பார்த்தேன். சுபலட்சுமி இப்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இப்போது அவர் நடிப்பதாக இல்லை. உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களுக்கும் நன்றி” என தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் கௌதமி.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

ஏற்கெனவே தன் மகளின் எதிர்கால பாதுகாப்பு கருதி நடிகர் கமலிடம் இருந்து பிரிந்து செல்ல முடிவு செய்ததாக அவர் கூறியிருந்தார்.

Related articles

Recent articles

spot_img