vijay 62 - 2026

கோலிவுட் திரையுலகம் கடந்த சில நாட்களாகவே தொடர் வேலைநிறுத்தம் காரணமாக சிக்கலில் உள்ளது. மார்ச் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை, மார்ச் 16 முதல் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இல்லை ஆகியவைகளால் சினிமாவே ஸ்தம்பித்து போயுள்ளது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 62; படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை விக்டோரியா ஹாலில் சிறப்பு அனுமதி பெற்று நடைபெற்று வருகிறது,

ஒட்டுமொத்த திரையுலகமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் விஜய் படத்திற்கு மட்டும் எப்படி தயாரிப்பாளர் சங்கம் சிறப்பு அனுமதியை கொடுக்கலாம் என தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் உரிய விளக்கம் அளிக்கவில்லை எனில் சங்கம் துண்டாட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending