பாலூட்டும் தாயின் மார்பகம் புனிதமானது: கஸ்தூரி ட்வீட்

கிசுகிசு சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்

breast feeding - 2026

க்ருஹலட்சுமி இதழின் அட்டைப் படத்தில் 3 மாதங்களுக்கு முன்னர் வெளியான தாய்ப்பால் ஊட்டும் மாடல் படத்தில், எந்த வித வக்கிரத்தையும் காண இயலவில்லை என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியதை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கஸ்தூரி, குழந்தைக்குப் பாலூட்டும் தாயின் மார்பகம் என்றுமே புனிதமானதுதான்! என்று தனது கருத்தைத் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.

மலையாள இதழான க்ருஹலக்ஷ்மி, கடந்த மார்ச் மாத இதழில் தாய்ப்பால் புகட்டுவதை மக்களிடம் பிரபலப்படுத்தும் நோக்கத்தில், பாலூட்டும் தாயின் மாடல் படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தெரிவித்த கருத்துடன், தனது கருத்தை இவ்வாறு பதிவிட்டிருந்தார் நடிகை கஸ்தூரி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.