அத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் ! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் !

Published:

a1 - 2026
லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் காமெடி நடிகனாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகர் சந்தானம் . பின்னர் சினிமா துறையில் பல்வேறு பெரிய ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகனாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். பின்னர் நகைச்சுவை நடிகனாக நடிப்பதை முற்றிலுமாக விட்டுவிட்டு தற்போது கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார் .santhanam 1 - 2026அவரது A1 திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் ஐந்து நாட்களே இருக்கும் நிலையில் இணையத்தில் அவரது புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.  அதில் அவர் உடல் மெலிந்து  பலவீனமாக காணப்படுகிறார்.santhanam recent - 2026இந்த ஆண்டு சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 ரிலீஸ்ஆகி மக்களிடையே பயங்கர வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த வாரம் A1 என்ற படம ரிலீசாகவிருக்கிறது. இதோடுகூட மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், டகால்டி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாரான நிலையில் உள்ளன.

தற்போது பூமராங் பட இயக்குனர் கண்ணன் அவர்களின் இயக்கத்தில் ஒரு கிராமத்து ஆக்சன் கதையில் நடிக்க வருகிறார். ஆகஸ்ட் மாதம் இதன் படபிடிப்பு தொடங்கவிருக்கிறது. சந்தானம் அதற்காக தீவிரமாக சிலம்பம் கற்றுக் கொண்டிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. இன்னும் A1 படம் ரிலீஸாக 5 நாட்கள் இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசனம் செய்ய வந்திருக்கிறார் சந்தானம். அங்கு ரசிகர்கள் எடுத்த படத்தை டுவிட்டரில் பதிவிட்டரிக்கின்றனர். பிறகுதான்  தற்போது இவ்வளவு உடல் மெலிந்து காணப்படுகிறார் என்று தெரியவந்துள்ளது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img