கல்யாணம் செய்து கொள்வதாக கூறி 2 வருடமாக என்னை!… கதறும் டிவி நடிகை…..

Published:

casting

ஹிந்தியில் வெளியாகும் பிரபல தொலைக்காட்சியில் நடிக்கும் நடிகை சமீபத்தில் வெர்சோவா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், பிரபல காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரி தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து கடந்த 2 வருடங்களாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

அதோடு, அடிக்கடி தனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்ததாகவும், இதுபற்றி கேட்டபோது தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, போலிசார் ஆயூஷ் திவாரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காஷ்டிங் இயக்குனர் ஆயூஷ் திவாரி மீது டிவி நடிகை பாலியல் புகார் கொடுத்திருப்பது பாலிவுட் சினிமா உலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Vellithirai News

Related articles

Recent articles

spot_img