பாஜக.,வில் இணைந்த நடிகர் ராதாரவி!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சென்னை
radharavi joined bjp - 2026

நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார். சென்னை வந்த பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர், தற்போது பாஜக.,வில் இணைந்துள்ளார். முன்னதாக அவர் திமுக.,வில் இருந்த போது, நயன்தாரா குறித்து அவதூறாகப் பேசினார் என்று கூறி, திமுக.,வில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப் பட்டிருந்தார். பின்னர் தாமே கட்சியில் இருந்து விலகுவதாக அவர் கூறினார்.

radharavi bjp - 2026

இதனிடையே, நடிகர் ராதாரவி பாஜக.,வில் இணைந்ததற்கு தாம் வரவேற்பு தெரிவிப்பதாக, நடிகர் எஸ்.வி.சேகர் தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவு செய்து, ராதாரவியுடன் தாம் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.