ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

Published:

actor vijay - 2026
#image_title

விஜய் நடித்துள்ள ஜனநாயக படம் முழுமையும் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக இந்தப் படம் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக பிரச்சனையில் சிக்கி சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சென்சார் சான்றிதழ் இல்லாமலேயே முழு படமும் இணையத்தில்  கசிய விடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இதனை வெளியிட்டவர்கள் யாராக இருக்கும் என்ற அனுமானங்கள் சமூக தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் சென்சார் சான்றிதழுக்காக  உள்ளதால் சென்சார் போர்டு இதை கசிய விட்டிருக்கும் என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். ஆனால், ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்ததற்கு நாங்கள் காரணம் அல்ல என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

‘ஜனநாயகன்’ படத்தை சென்சார் போர்டு கசிய விட்டதாக பரப்பப்படும் தகவல் ஆதாரமற்றது, உண்மைக்கு புறம்பானது. தயாரிப்பு நிறுவனம் வசமுள்ள KDM கடவுச் சீட்டு இல்லாமல் சென்சார் போர்டால் படத்தை பார்க்கவே முடியாது. ‘ஜனநாயகன்’ திரைப்படத் தொகுப்பை மார்ச் 17ஆம் தேதியே தயாரிப்பு நிறுவனத்திடம் நாங்கள் திருப்பி வழங்கிவிட்டோம். தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களும் பாதுகாப்பாக கையாளப்படுகின்றன, என்று சென்சார் போர்ட் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அரசியல் கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் இறங்கியுள்ள நடிகர் விஜய், ஜனநாயகன் என்ற திரைப்படத்தை கடைசியாக முடித்துக் கொடுத்தார். அதுவே தமது திரைவாழ்வின் கடைசிப் படம் என்று அவர் அறிவித்துவிட்டு, கட்சியைத் தொடங்கி, தற்போது தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார். 

ஆனால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட ஜனநாயகன் படம், சென்சார் சான்றிதழ் பெற முடியாமல், நீதிமன்றத்தை விஜய் தரப்பு அணுகி, அங்கும் குட்டுப்பட்டு, தற்போது வரை எப்போது வெளியாகும் என்று தெரியாத சூழலே நிலவுகிறது.  இந்நிலையில், படம் வெளியாகாததற்கு அரசியலே காரணம் என்று விஜயும், அவரது ரசிகர்களும் கூறி வருகின்றனர். 

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் 5 நிமிட காட்சிகள் அண்மையில் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானது. திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகாத சூழலில், இணையத்தில் படத்தின் காட்சிகள் வெளியானதால் படத் தயாரிப்புக் குழு அதிர்ச்சி அடைந்தது. மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், தற்போது மொத்த படமுமே இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், ஜனநாயகன் படம் லீக் ஆனதற்கு நாங்கள் தான் காரணம் என்ற புகார் தவறானது; அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் தணிக்கை வாரியம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது. இந்த நடைமுறை கடவுச்சொல் மூலமே பாதுகாக்கப்படுகிறது. இந்த KDM கடவுச்சொல் ஆனது, தயாரிப்பாளரிடம் மட்டுமே தான் இருக்கும்.

இந்தக் கடவுச்சொல்லைத் தவிர வேறு ஏதேனும் கடவுச்சொல்லை பயன்படுத்தி படத்தைப் பார்க்க முடியாது. ஜனநாயகன் படம் டிஜிட்டல் சினிமா தொகுப்பு, உரிய ஒப்புதலுடன் மார்ச் 17ம் தேதி மும்பையில் படத்தை சான்றிதழுக்காக விண்ணப்பித்தவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அன்றைய தினம் முதல், படத்தின் சினிமா தொகுப்பு அவர்களிடமேதான் இருக்கிறது – என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேடிஎம் என்பது என்ன?

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (CBFC), திரையிடலின் போது திரைப்படங்கள் கசிவதைத் தடுக்க, பாதுகாப்பான, காலவரையறைக்குட்பட்ட KDM (திறவுகோல் விநியோக செய்தி) முறையைப் பயன்படுத்துகிறது. 

KDM என்பது ஒரு டிஜிட்டல் சினிமா தொகுப்பை (DCP) இயக்குவதற்குத் தேவைப்படும் மறைகுறியாக்கப்பட்ட கோப்பு ஆகும். KDM-கள் தயாரிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், குறுகிய காலத்திற்கு (எ.கா., 5 மணிநேரம்) மட்டுமே செல்லுபடியாகும் என்றும், அவை திரைப்படக் கசிவுகளுக்குக் காரணம் அல்ல என்றும் CBFC வலியுறுத்துகிறது. 

பாதுகாப்பு நெறிமுறை: DCP மறைகுறியாக்கப்பட்டுள்ளது, மேலும் ஒரு குறிப்பிட்ட KDM மட்டுமே அதை இயக்க அனுமதிக்கிறது, இது அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்கிறது.

கசிவுத் தடுப்பு: அனைத்து சான்றிதழ் சமர்ப்பிப்புகளுக்கும் CBFC ஒரு பாதுகாப்பான, கடவுச்சொல்-பாதுகாக்கப்பட்ட KDM செயல்முறையைப் பின்பற்றுகிறது. 

தயாரிப்பாளரின் பொறுப்பு: சமீபத்திய சர்ச்சைகளில், KDM வாரியத்திடம் இல்லாமல், தயாரிப்பாளர்/திரைப்படத் தயாரிப்பாளரிடமே உள்ளது என்று CBFC தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு DCP கோப்பு நகலெடுக்கப்பட்டாலும், அதற்கான திறவுகோல் இல்லாமல் அதை இயக்க முடியாது என்பதை KDM அமைப்பு உறுதி செய்கிறது; இந்தத் திறவுகோல் குறிப்பிட்ட, அங்கீகரிக்கப்பட்ட கணினிகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

யார் பார்த்த வேலை?

இனையத்தில் கசிந்த படத்தின் டிஜிட்டல் அளவு, நேற்று முதலில் 650 எம்பி அளவில் வெளியானதாகச் சொன்னார்கள். பிறகு 1.4 ஜிபி அளவு என்றார்கள்.  இன்று காலையில 3.96 ஜிபி அளவு என்றார்கள். இப்போது 8.5 ஜிபி அளவு என்கிறார்கள். அப்படி என்றால் அது, Ultra 4K தியேட்டர் பிரின்ட்டு! எனில் யார் பார்த்த வேலை இது..? என்று இணையதளங்களில் கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. 

தேர்தல் அரசியலுக்காக, தேர்தல் நேரத்தில் தயாரிக்கப்பட்ட படம் ஜனநாயகன். படத்தின் தலைப்பு பெயரே அதன் உள்நோக்கத்தைச் சொல்லும். இந்நிலையில், சென்சார் போர்டில் சிக்கிக் கொண்டு காத்திருக்கும் ஒரு படத்தை சென்சார் சான்று இல்லாமலேயே வெளியிடும் துணிச்சல் விஜய் தரப்பைத் தவிர வேறு எவருக்கும் வந்திருக்காது என்ற கருத்துகளும் பலமாக எதிரொலிக்கின்றன. அப்படி நிகழ்ந்திருந்தால் விஜய் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர் என்றும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img