வெற்றி மாறன் வெளியிடும் ‘ஓம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப் பட்டது. ஓம் படத்தின் ஃப்ர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது. ஜூலை 5ம் தேதி நாளை மாலை 6 மணிக்கு இதனை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிடுகிறார்.
பாரதிராஜாவின் ‘ஓம்’ என்ற தலைப்புடன் இந்த ஃபர்ட்ஸ் லுக் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது. அண்மைக் காலமாக, மத ரீதியில் வேண்டுமென்றே சர்ச்சைகளைக் கிளப்பி தனது இருப்பைக் காட்டிக் கொண்டிருக்கும் இயக்குனர் பாரதிராஜா இதன் மூலமும் அரசியல் ரீதியில் அணுகுவார் என்கிறார்கள்.
தற்போது எந்த பெரிய திரைப்பட நடிகர்களின் படங்களும் திரைக்கு வரும் வாய்ப்பு இல்லை என்பதாலும், பெரிய நடிகர்களின் படங்கள் வராத ஓர் இடைவெளியில், தனது பழைய தயார்ப்புப் படங்கள், நின்று போன படங்களை தூசு தட்டி எடுத்து இப்போது வெளியிடும் முயற்சியில் இருக்கிறார் பாரதிராஜா. அதற்காக அவருக்கு கணிசமான தொகை வந்து சேர்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே முன்பு எடுத்து பாதியில் நின்றுபோன படங்களை, புதுமுகங்களை வைத்து எடுத்த படங்களை இப்போது வெளியிடும் முயற்சியில் உள்ளார் பாரதிராஜா என்கிறார்கள்.
பாஜக., மற்றும் மத்திய் அரசு எதிர்ப்பு வசனங்களை வைத்து, பாஜக.,வினர் அதற்காக எதிர்ப்பு தெரிவித்ததால் விஜய் நடித்த மெர்சல் படம் ஓடியதும், அதையே எதிர்பார்த்து பாஜக., எதிர்ப்பு வசனங்களை பா.ரஞ்சித் வைத்திருந்தும் அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்காததால் ரஜினியின் காலா படம் தோல்வியைச் சந்தித்ததும் அண்மைக் கால திரையுலக நிகழ்வுகள்.
இந்த நிலையில் இந்து மதத்தினர் புனிதமாகக் கருதும் ஓம் எனும் மந்திரத்தை முன்வைத்தே படத்தை உருவாக்குவதும், ம் என்ற எழுத்தில் பேனா முனை என எழுத்துச் சுதந்திரம் என்பதை காட்டும் விதமாக தலைப்பை உருவாக்கி போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இதன் உருவாக்கத்திலேயே பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோரின் இந்து மத எதிர்ப்பும் காழ்ப்பு உணர்வும் வெளிப்படுவதால், எதிர்ப்பும் இப்போதே கிளம்பும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
திரைப் பட பாடலாசிரியர்கள் வைரமுத்து, நா முத்துக்குமார் (முன்னர் எழுதியது), மதன் கார்கி, கபிலன் வைரமுத்து, இசையமைப்பாளர் சபேஷ்-முரளி, சாலை சகாதேவன் என ஒரு கூட்டணியில் உருவாகிறது ஓம்.
#Om Movie First Look On Tomorrow 6 PM Releasing By @VetriMaaran




