டெல்டாவை எண்ணெய் மண்டலமாக்கத் துடித்த அப்பா… நீலிக்கண்ணீர் வடிக்கும் மகன்!

உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
stalin karunanidhi - 2026

ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு. உங்கள் தந்தையின் சட்டமன்ற உரையை பாருங்கள்.

“தமிழ்நாட்டில் பொதுவாக காவிரி தீரத்தில், தஞ்சை, தென்னாற்காடு பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைக்கிற சாத்திய கூறுகள் மிக அதிகமாகியுள்ளது. இதை மூலப் பொருளாகக் கொண்டு ஆண்டு ஒன்றுக்கு 5 இலட்சம் டன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவ ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி மத்திய அரசின் பரிசீலனைக்காக அனுப்பி இருக்கிறோம்.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அருகே பனங்குடி என்ற இடத்தில் அனேகமாக நிறுவப்படக்கூடும். இந்த சுத்திகரிப்பு ஆலையால் தஞ்சை, தென்னாற்காடு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு ஒரு உகந்த சூழ்நிலை ஏற்படும்”

  • 03/05/1989அன்று சட்டப்பேரவையில் அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள்.

அன்று டெல்டாவை எண்ணெய் மண்டலமாக்க துடித்த திமுக, இன்று நீலிக்கண்ணீர் விடுவது ஏன்? உங்கள் தந்தையை, அன்றைய திமுக., தலைவரை கண்டிப்பீர்களா? நீங்கள் கண்டிப்பீர்களா? மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா?

  • நாராயணன் திருப்பதி. (பாஜக.,)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.