என்ன… வள்ளுவர் சமணரா?!

Published:

bjp thiruvalluvar kalki - 2026

திருவள்ளுவர் சமண மதத்தை சேர்ந்தவர் என்று கடந்த சில வாரங்களில், வாதங்களை வைத்தனர் பலர், அது குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தேன். அவர்களின் பார்வைக்கு,

சமணத்தின் கொள்கை அகிம்சை.சமணர்கள் ஏரால் உழுது உண்பதை மண்ணில் வாழும் நுண்ணியிர்களுக்கும் (பூச்சி,புழுக்கள் உட்பட கண்ணுக்கே புலப்படாத உயிரினங்கள்) இம்சையாகவே காண்கின்றனர்.சமண மதத்தை சார்ந்தவர்கள் விவசாயம் செய்யாது இருப்பதை கடைப்பிடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளுவர் ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்று, ஏர் உழவு தொழில் தான் சிறந்தது என்று கூறியுள்ளார். வேறொரு குறளில்,வயலில் களை பிடுங்குவது போல், மன்னன் கொடிய கொலைகாரர்களை வதம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது சமண மத கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டது.

ஆக, சமண மத கோட்பாடுகளை திருவள்ளுவர் பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது.

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இஸ்லாமும், கிருத்தவமும் இல்லை என்பதோடு சமண மத கோட்பாடுகளை அவர் கொண்டிருக்கவில்லை என்பதால் திருவள்ளுவர் ஹிந்து தான் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

காவி மயமா திருவள்ளுவர், என்பவர்களுக்கு ‘ஆமாம் திருவள்ளுவர் காவி தான்’ என்பதை உரக்க சொல்வோம்.

  • நாராயணன் திருப்பதி.

Related articles

Recent articles

spot_img