திமுக எம்எல்ஏ., ஆலடி பூங்கோதை தற்கொலை முயற்சி!?

Published:

poongothai-aladi-aruna (Pic: Facebook)
poongothai-aladi-aruna (Pic: facebook.com/poongothaidmk)

திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப் படுகிறது. அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதாகவும், இதை அடுத்து அவர், நெல்லை ஷீபா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

poongothai-aladi-aruna1
poongothai-aladi-aruna1

முன்னதாக நேற்று சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் #பூங்கோதைஆலடிஅருணா தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப்பெற்றுள்ள டாக்டர்#சமீரான் ஐச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் என்றும், அப்போது தொகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் என்றும் அவரது பேஸ்புக் பக்கத்தில் இன்று காலை பதிவிடப் பட்டது.

மேலும்,

நமது சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் #பூங்கோதைஆலடிஅருணா அவர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்தபின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது..மாவட்ட ஆட்சியரிடம் வழங்கபட்ட கோரிக்கை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில்டாக்டர் கலைஞர் அவர்களால் தொடங்கபட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு பெண்கள் திருமண உதவி திட்டத்தின் கீழ் உதவி தொகை மூன்று ஆண்டுகளாக வழங்கபடாததை உடனடியாக வழங்குமாறு கேட்டு கொண்டார்….. – என்றும் ஊடகங்களில் வெளியான பேட்டியுடன் தகவல் பதிவு செய்யப் பட்டிருந்தது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Related articles

Recent articles

spot_img