பாதிக்கப் பட்டவரிடம் ரூ.3000 பிச்சை எடுக்கும் அளவு ஆர்.டி.ஓ.வை பஞ்சத்தில் வைத்துள்ளது அரசு!

Published:

bribe 1 - 2026

எனது பெயர் கவிராஜ். எனது இடியாஸ் வாகனம் கடந்த புதன்கிழமை அன்று சென்னை நங்கநல்லூரில் முன்பக்கம் அதிக அளவில் சேதம் அடைந்தது. எனது ஓட்டுனர் உலகநாதன் என்பவர் பரங்கிமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பின்னர் காவலர்கள் வந்து விசாரித்து வாகனத்தை காவல் நிலையம் கொண்டு வரக் கூறினார்கள். நானும் எனது ஓட்டுநரும் வாகனத்தை இன்னொரு வாகனத்தில் கட்டி காவல் நிலையம் வந்து சேர்ந்தோம்.

அப்போது பணியில் இருந்த காவலர்கள் இனிமேல் எங்களுக்கு இரவு டூட்டி என்று கூறி திங்கள்கிழமை அதாவது :09:12:19 அன்று வந்து வாகனத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மீனம்பாக்கம் சிந்து பிரேக் இன்ஸ்பெக்டரிடம் (அவர் பெயர் கிருஷ்ணன்) வாகனத்தை காட்டி ME டெஸ்ட் முடித்து வாகனத்தை தருவதாக கூறினார்கள்.

காவல்துறையினர் சொன்னபடி நடந்து கொண்டார்கள். ஆனால் அந்த பிரேக் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் என்பவர் அவர் ஒரு புரோக்கரிடம் சொல்லி (அந்த புரோக்கரின் பெயர் பாபு என்பவர் ) மூன்றாயிரம் ரூபாய் தந்தால்தான் எம்மி சர்டிபிகேட் தருவேன் என்று கூறி என்னை அலைக்கழித்தார்கள்.

அதற்கு நான் ஐயா நான் பாதிக்கப்பட்டவன் எனது வாகனமும் டேமேஜ் ஆகி விட்டது இதற்கு நான் எதற்கு பணம் தரவேண்டும் என்று கேள்வி எழுப்பினேன்

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

அதற்கு இந்த வாகனம் சரி செய்ய வேண்டும் என்றால் ஒரு லட்ச ரூபாய் செலவாகும். நாங்கள் சர்டிபிகேட் கொடுத்தால்தான் இன்சூரன்ஸ் உங்களுக்கு கிடைக்கும் என்று பேரம் பேசினார்கள். நான் என்னிடம் பணம் இல்லை என்று கறாராக கூறி விட்டேன்.

சரி அப்படி என்றால் நீ கிளம்பலாம் என்று கூறிவிட்டார்கள். ஆனால் ஆர்டிஓ பார்மாலிட்டி எல்லாம் முடிந்தது செஸ் நம்பரும் பிரிண்ட் அவுட் எடுத்தார்கள்

நானும் கிளம்பி அந்த வாகனத்தை இன்னொரு வாகனத்தில் கட்டி அம்பத்தூர் லான்சன் டொயோடா பாடி ஷாப்புக்கு வந்துவிட்டேன்.

அங்கு பார்மாலிட்டி எல்லாம் முடித்துக் கொண்டு இருக்கும் பொழுது இந்த பாபு என்பவர் அவர் செல்லில் இருந்து என்னை தொடர்பு கொண்டார்… நீ எங்கே இருக்கிறாய் என்று விசாரித்தார்.

நான் அம்பத்தூர் வந்துவிட்டேன் என்று கூறினேன். அதற்கு நீங்கள் மீண்டும் மீனம்பாக்கம் ஆர்டிஓ அலுவலகம் வர வேண்டும் என்று கூறினார்கள்.

நான் எதற்கு என்று கேள்வி கேட்டேன். உங்கள் வாகனத்திற்கு இன்சுரன்ஸ் கிளைம் ஆக வேண்டுமென்றால் ஆர்டிஓ அலுவலகம் வந்து ஒரு கையெழுத்து போட வேண்டும் என்று கூறினார்கள்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

நான் மீண்டும் 25 கிலோ மீட்டர் பயணம் செய்து ஆர்டிஓ அலுவலகம் சென்றேன். உனக்கு ஒரு 3 ஆயிரம் ரூபாய் தர வக்கில்லை என்றால் உனக்கு எதற்கு வாகனம் என்று என்னை கேட்டு ஒருமையில் திட்டினார்கள்

எனது வாகனத்திற்கு இன்னும் ஏழு மாதம் எப்சி கரண்டில் உள்ளது உனது வாகனத்துக்கு உண்டான எப்சியை நாங்கள் ரத்து செய்து விட்டோம் என்று கூறி ஒரு பார்மில் என்னையும் எனது ஓட்டுநரையும் கையெழுத்து போடும்படி கூறினார்கள்

நாங்களும் கையெழுத்து போட்டோம் அதன் பிறகு மீண்டும் நீ இன்னொரு முறை எப்சி செய்துகொள் அப்பொழுது உனக்கு பத்தாயிரம் 15000 ரூபாய் செலவாகும் அல்லவா என்று கூறி கேவலமாக சிரித்தார்கள்

நானும் அந்த பிரேக் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் என்பவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு நீங்களெல்லாம் ரூல்ஸ் பிரகாரம் தான் நடந்து கொள்கிறீர்களா என்று கேட்டேன்

அதற்கு அவர் நீ வேண்டுமென்றால் எழிலகம் சென்று டிரான்ஸ்போர்ட் கமிஷனரிடம் போய் புகாரை வைத்துக்கொள். என்னை ஒன்றும் புடுங்க முடியாது என்று சொன்னார்

ALSO READ:  இலவச பஸ் வேண்டாம்; கட்டண பஸ் அனுப்பி உரிய மரியாதை கொடுங்க போதும்!

கிருஷ்ணன் என்ற பிரேக் இன்ஸ்பெக்டர் நானும் எனது வாகனத்தின் f.c. கேன்சல் செய்த காரணத்தினால் வருத்தத்துடன் வீடு வந்து சேர்ந்தேன் …

லட்சக் கணக்கில் இவர்களுக்கு எல்லாம் சம்பளம் கொடுப்பதாக அரசும் முதலமைச்சரும் பீற்றிக் கொள்கிறார்கள் ஆனால் நிஜமோ .. ரூ.3 ஆயிரத்திற்கும் கூட வக்கற்ற நிலையில் அரசு வைத்திருக்கிறது.

  • கவிராஜ்

Related articles

Recent articles

spot_img