பட்டியலின இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வு பெற்ற கிறிஸ்துவர்! இந்த பொழப்புக்கு…

புகார் பெட்டி
christianoff - 2026

கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரியாக இருப்பவர் ராஜ கிருபாகரன். கிறிஸ்தவரான இவர், “இந்து ஆதிதிராவிடர்” என்று போலி சான்றிதழ் கொடுத்து பட்டியலின இட ஒதுக்கீட்டில், வேலையில் சேர்ந்துள்ளாராம். அத்துடன் பட்டியலின இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி பதவி உயர்வும் பெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இவர் இப்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியை பெறுவதற்கும், “இந்து ஆதிதிராவிடர்” என்று போலி சான்றிதழை பயன்படுத்தி பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வுக்காக காத்து இருக்கிறாராம்.

complaint - 2026

இந்த நிலையில் ராஜ கிருபாகரன் கோப்புகளில் கையெழுத்து போடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கோப்புகள் மலைபோல் குவிந்து உள்ளன.

இதுகுறித்து ராஜ கிருபாகரன் தன்னுடன் பணியாற்று பவர்களிடம் கூறியுள்ளபோது, “பட்டியலின அதிகாரிகள் பட்டியலில் எனது பெயர் மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. எனக்கு விரைவில் கன்ஃபர்ட் ஐ.ஏ.எஸ் கிடைக்க உள்ளது. இந்த நிலையில் தேவை இல்லாமல் கோப்புகளில் கைழுத்து போட்டு மாட்டிக்கொள்ள மாட்டேன்.” என்றுள்ளாராம்!

இதனால் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடும் கோபத்தில் உள்ளார். இது தொடர்பாக பல முறை எச்சரித்தும் ராஜ கிருபாகரன் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.

complaint 2 1 - 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “ஒரு கோப்பில்கூட கையெழுத்திடாத அதிகாரி” என்ற பெயரை ராஜ கிருபாகரன் பெற்றுள்ளார் என்கின்றனர் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.