சேலம் வேம்படிதாளம் அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருந்தவர் பாலாஜி வயது 45. இவர் 5 மாதங்களுக்கு முன்பு பள்ளி ஆய்வகத்தில் வைத்து அந்த பள்ளியில் சென்ற ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவியை கற்பழித்துள்ளார் .
அதனை காணொளி எடுத்து மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த மாணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ வழக்குபதிவு செய்த போலீசார் ஆசிரியரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே மாணவியின் கர்ப்பத்தை கலைக்க அவரது தாய் முடிவு செய்தார். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது கர்ப்பத்தை கலைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.


