rippon pakota - 2026

ஆரோக்கிய சமையல்: கேழ்வரகு ரிப்பன் பக்கோடா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
rippon pakota - 2026

கேழ்வரகு ரிப்பன் பக்கோடா
தேவையான பொருட்கள்
1 கப் கேழ்வரகு மாவு
1 டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு
1 டீஸ்பூன் மிளகாய் தூள்
உப்பு தேவையான அளவு
ஸ்டெப்ஸ்
கேழ்வரகு மாவை சலித்து எடுத்து வைக்கவும்.
உளுந்தை வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து வைக்கவும்.

பின்னர் ஒரு பௌலில் கேழ்வரகு மாவு, பொடித்து வைத்துள்ள உளுந்து மாவு, மிளகாய் தூள் உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாக மாவு பிசையவும்.
பின் ரிப்பன் பக்கோடா செய்யும் அச்சில் மாவு வைத்து, வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், ரிப்பன் பக்கோடா பிழிந்து, நன்கு வெந்ததும் எடுக்கவும்.

இப்போது சுவையான மொறு மொறு ராகி ரிப்பன் பக்கோடா அல்லது முறுக்கு சுவைக்கத்தயார்.
இந்த பக்கோடா காற்று புகாத கன்டைனரில் போட்டு வைத்தால் ஒரு மாதம் ஆனாலும் அதே மொறுமொறுப்பு மற்றும் சுவையான மாறமல் இருக்கும்

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.