பள்ளிகளில்… இலவச மடிக்கணினி வழங்குவது நிறுத்தம்!

Published:

freelaptop - 2026

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச லேப்டாப் மடிக்கணினிகளை நிறுத்தி வைக்கும்படி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு கல்வி ஆண்டில் 2018 பிளஸ் டூ படித்த வர்கள் தற்போது பிளஸ் டூ மற்றும் பிளஸ் 1 படிப்பவர்கள் என மூன்று தரப்பினருக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழக மின்னணு நிறுவனமான எல்காட் நிறுவனத்தில் இருந்து நேரடியாக பள்ளிகளுக்கு லேப்டாப்புகள் வழங்கப்படுகின்றன.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. இந்த பணிகள் 50 சதவிகிதம் அளவுக்கு முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில் லேப்டாப்பின் இயக்கத்தை நிறுத்தி வைக்கும்படி பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிர்வாக காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் உயர் அதிகாரிகள் மீண்டும் உத்தரவிட்ட பிறகு லேப்டாப்புகள் மீண்டும் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Related articles

Recent articles

spot_img