porn assienment

ஆபாசப்படங்களின் வகைகளை விளக்குமாறு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுத்து பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது பள்ளி நிர்வாகம்.

இங்கிலாந்தில் உள்ள ஹல் பகுதியை சேர்ந்த ஆர்க்கிபிஷாப் செண்டாமு அகாடமி என்ற பள்ளியில் 11 முதல் 14ம் வயது மாணவ மாணவிகளுக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், Hardcore Porn, Soft Porn, Revenge Porn உள்ளிட்டவற்றை விளக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகத்தின் இந்த செயல் பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

14 வயதே ஆன மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் என்கிற பெயரில் இது போன்று கொடுப்பது ஏற்கமுடியாதது எனவும் “இந்த வயது குழந்தைகளுக்கு டிக் டாக், சமூக வலைதளம், நடனம் உள்ளிட்டவைகள் மட்டுமே தெரியும். ஆனால், பள்ளியே இதுபோன்ற ஆபாசமான விஷயங்களை கற்றுக்கொடுக்கிறது.

தற்போதைய காலத்து குழந்தைகள் பள்ளிகளில் கொடுக்கப்படும் அசைன்மெண்டுகளை இணையத்தை பார்த்தே எழுதுகின்றனர். Soft Porn, Hardcore Porn உள்ளிட்டவைகளை இணையத்தில் தேடினால் என்னவரும் என்று பள்ளி நிர்வாகத்திற்கு தெரியாதா?” என ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்று பல பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவிக்கையில்,”மாணவர்கள் யாரையும் இணையத்தில் இதுகுறித்து தேட நாங்கள் அறிவுறுத்தவில்லை. இந்த கேள்விகளுக்கான பதில்கள் அனைத்துமே ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அதில் இருந்துதான் மாணவர்களை பதில் எழுதக் கூறியுள்ளோம். Personal, Social and Health Education என்ற பிரிவின் கீழ் மட்டுமே மாணவர்களுக்கு இதுபோன்ற ஹோம் வொர்க் கொடுக்கப்பட்டது. இனிமேல் வயதுக்கு தகுந்தவாறு வீட்டுப்பாடங்களை கொடுக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ஆனால், மாணவர்களுக்கு இதுபோன்ற அசைன்மெண்ட் கொடுத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending