அருணை பொறியியல் கல்லூரியில் 23வது பட்டமளிப்பு விழா!

கல்வி சற்றுமுன் சென்னை
arunai eng college graduation day - 2026

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியின் 23 வது பட்டமளிப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.

இவ்விழாவில் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பிடித்த 19 மாணவர்களுக்கு அண்ணா, கலைஞர் , பெரியார் தலைவர்களின் பெயர்களில் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் 391 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப் பட்டது.

இவ்விழாவிற்கு கல்லூரியின் துணை தலைவர் எ. வ. குமரன், முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமநாதன், ( ஓய்வு), மற்றும் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர் உயர்நீதிமன்ற நீதிபதி ராமநாதன் சிறப்புரையாற்றும் போது,

நாங்கள் படிக்கும் காலத்தில் தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு என்பது கனவுகளாக இருந்த நிலை மாறி, உலக அளவில் மேலை நாடுகளுடன் போட்டியிடும் அளவிற்கு பொறியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற நிலை உருவாகியுள்ளது.

தேவை ஒரு பட்டம் என்பதைவிட ஆயிரம் பேருக்கு வேலை வழங்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இன்று பட்டம் பெறும் அனைத்து பொறியாளர்களும் தொழில் முனைவோராக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இவ்விழாவில் அருணை பொறியியல் கல்லூரியின் பதிவாளர் முனைவர் சத்தியசீலன், கல்லூரியின் முதல்வர் முனைவர் ரவிச்சந்திரன் , கல்லூரியின் ஆலோசகர் முனைவர் ஆறுமுகம், பேராசிரியர்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் வருகை புரிந்து விழாவை சிறப்பித்தனர். இயந்திரவியல் துறை பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

  • செய்தி: எஸ்.ஆர்.வீ. பாலாஜி, திருவண்ணாமலை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.