10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!

கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம்

08 July27 exam time table - 202610-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகின்றது.

2018 – 19ம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று தமிழ் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெற உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9,97,794 மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

இந்த பொதுத்தேர்வுக்காக மொத்தம் 3731 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

சென்னையில் 213 தேர்வு மையங்களில் 50,678 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய 4 சிறைகளில் 152 சிறைவாசிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வுக்காக 49,000 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் அமர்த்தப்படுகின்றனர். முறைகேடு களை தடுக்க அனைத்து மாவட்டங் களிலும் சுமார் 5500 பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு மைய வளாகத்தில் மாணவ-மாணவிகளும், தேர்வு அறையில் ஆசிரியர்களும் செல்போனை வைத்திருக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.