அரசு பள்ளிகளை விட்டு தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும்!

Published:

hraja - 2026

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது என்றும், அதே நேரம் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா, இது குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டிய நேரம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவில்…

அரச பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை 415558 குறைவு. ஆனால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 1210055 அதிகரிப்பு. இது அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளின் பாடத்திட்டம் கற்பித்தல் ஆகியவை பற்றிய முழு பகுப்பாய்வுக்காண நேரமிது… என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இன்று வெளியான செய்தியில், தனியார் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 12,10,055 மாணவர்கள் அதிகரித்துள்ளதாக,  சட்டப்பேரவையில் கல்வித்துறை தாக்கல் செய்த புள்ளி விவர ஆவணத்தில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2,47,629 பேர் குறைவு என்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 1,67,929 பேர் குறைவு என்றும், ஒட்டுமொத்தமாக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 4,15,558 பேர் குறைவு என்றும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.

Related articles

Recent articles

spot_img