திமுக., அரசின் சாராயக் கடை ஊழல்: போராட்டத்தை தடுத்து பாஜக., தலைவர்கள் கைது!

Published:

bjp leaders arrested for tasmac corruptions - 2026

சென்னையில் தமிழக அரசின் சாராய விற்பனை நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்த நிலையில், இந்த ஊழல் தொடர்பாக கேள்வி எழுப்பி, பாஜக., முற்றுகை போராட்டம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற, பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்பட, பாஜக.,  மூத்த தலைவர்களை ஆளும் திமுக., அரசின் போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசின் சாராய நிறுவனமான டாஸ்மாக் நிறுவனம், மது ஆலைகளில் இருந்து மதுபானங்களைக் கொள்முதல் செய்து, மாநிலம் முழுதும் உள்ள, 4,830 சில்லறை மதுக்கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறது. கடந்த மார்ச் 6ஆம் தேதி திமுக. அரசின் சாராய நிறுவனம், திமுக., அரசின் சாராய நிறுவனத்துக்கு மது கொள்முதல் செய்யும் திமுக.,வினருக்குச் சொந்தமான சாராய ஆலைகள், சாராய விற்பனை நிறுவனங்கள், அரசின் சாராய நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகம், இந்த நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகளின் வீடுகள் என 25க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

இந்த சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை கூறியுள்ளது. இந்நிலையில், மார்ச் 17 இன்று, அரசின் சாராய நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்த முன்னதாகவே அறிவித்துவிட்டு, செல்ல திட்டமிட்ட  பாஜக., தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். கு.அண்ணாமலை உள்ப்ட, சில தலைவர்கள் செல்லும் வழியில்  கைது செய்யப்பட்டனர். 

பாஜக., சட்ட மன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோருடன், பாஜக., மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமிழக பாஜக., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, பாஜக., மாநில செயலாளர்கள் வினாத் செல்வம், அஸ்வத்தாமன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, போராட்டத்திற்குச் செல்லும் வழியில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியபோது: “நானும் பாஜக., நிர்வாகிகளும் பேசக்கூடாது என தமிழக அரசு நினைக்கிறது. நாங்கள் பேசினால் உண்மைகள் வெளிவந்து விடும் என்பதால் எங்களை கைது செய்கிறார்கள். நான் பேசக்கூடாது என அரசு நினைக்கிறது. டாஸ்மாக் தலைமையகம் முற்றுகைப் போராட்டத்திற்கு செல்லும் பாஜக.,வினரை கைது செய்வது கண்டிக்கத்தக்கது. முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரையும் முற்றுகையிடுவோம். 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஊழல் பணத்தை வைத்து திமுக., தேர்தலை சந்தித்தது. 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலையும் ஊழல் பணத்தை வைத்து திமுக., சந்திக்க உள்ளது – என்று கூறினார். 

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

செய்தியாளர்களிடம் பேசிவிட்டு போராட்டத்துக்குப் புறப்பட்ட அண்ணாமலையை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

பின்னர், ஆளும் திமுக., அரசின் சாராய நிறுவனமான டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது நடவடிக்கை தொடர்பாக அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், 

தி.மு.க., அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம்.

தொடைநடுங்கி திமுக அரசு, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்திரராஜன், மாநிலச் செயலாளர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது?

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்? – என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Related articles

Recent articles

spot_img