மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானிக்கு கொரோனா தொற்று!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
smriti irani
smriti irani

மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பொது மக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், முதன்மை பணியாளர்கள் அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரையும் தாக்கி வருகிறது. 

ஏற்கெனவே இந்த வைரஸ் தொற்றுக்கு மத்திய அமைச்சர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் மீண்டு வந்துள்ளனர்.  இந்த நிலையில் தற்போது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்ம்ருதி இரானிக்கும் கொரோனா வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என  தெரிவித்துள்ளார்

ஏற்கனவே  மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேக்கு நேற்று கொரோனா  தொற்று உறுதியான  நிலையில் இன்று ஸ்ம்ருதி இரானியும் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருக்கிறார்.   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.