தீவிரவாத அச்சுறுத்தல்: விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு

தமிழகத்தில் தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் போலீசார் நேற்றிரவு உஷார் படுத்தப்பட்டனர். அனைத்து மாவட்ட எல்லைகளிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. விழுப்புரத்தில் நள்ளிரவில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டன. மாவட்டம் முழுவதும் 64 இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், கார், பேருந்துகளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதேபோல் கோவையில் காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம், உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் நேற்றிரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பேருந்து ரயில் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதிக்கப்பட்டது. கோவை -கேரள எல்லையில் பலத்த சோதனைக்கு பின்பே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. கோவையில் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாகை வேளாங்கண்ணியில் ஏராளமான சிறப்பு அதிரடிப் படை குவிக்கப்பட்டனர். தஞ்சையில் இருந்து 3 டிஎஸ்பிகள் மற்றும் 6 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்றிரவு , தனியார் மற்றும் பேராலய விடுதிகளிலும், பேருந்து மற்றும் ரயில் நிலைத்திலும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர். சந்தேகத்திற்கிடமான வகையில் உள்ளவர்களிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். நாகை மாவட்ட கடலோர எல்லை பகுதியில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசார் நள்ளிரவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். வேளாங்கண்ணி பேராலய திருவிழா தொடங்க உள்ளதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னையில் நேற்றிரவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியும் மேற்கொண்டனர். தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நேற்று நள்ளிரவு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories