அமெரிக்க மண்ணிலே, அனைத்து மத சபையிலே, 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி, இந்து சமயத்திற்கு முடிசூடல் நடத்தினார், சுவாமி விவேகானந்தர்.
இந்துக்கள் என்றாலே, தவறான எண்ணத்தை கொண்டு இருந்த வெளிநாட்டு மக்கள் மத்தியில், இந்து மதத்தின் மேன்மைகளையும், உயர்வுகளையும் அனைவரும் அறியும் வகையில், உலகு அறியச் செய்து, இந்து மதத்தின் பெருமைகளை, சிக்காகோவில், அனைவருக்கும் கொண்டு போய் சேர்த்தார், சுவாமி விவேகானந்தர்.
செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி, சுவாமி விவேகானந்தர், பேசிய பேச்சு, இன்றளவும் பலராலும் பாராட்டப்பட்டு, பகிரப்பட்டு வருகின்றது.
அந்த அமெரிக்காவில், சமீபத்தில், இந்து மதத்தை அப்புறப்படுத்தும் நோக்கத்தில், “Dismantling Global Hindutva” என்ற நிகழ்ச்சி, செப்டம்பர் மாதம் 10 முதல் 12 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அது, உலகம் முழுக்க வாழும், பல கோடி இந்துக்கள் மத்தியில், பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது.
கருத்தரங்கில் உரையாற்றியவர்களின் பின்னணி:
Dr ஆட்ரி ட்ரஸ்சிகி (Dr Dr. Audrey Truschke):
இந்தியாவுக்கு எதிரான மனநிலையை கொண்டவர். “இந்துத்துவா சிந்தனைக்கு எதிரான மாணவர்கள்” (Students Against Hindutva Ideology) என்ற அமைப்பின் ஆலோசகர்.
அந்த அமைப்பானது, “பாகிஸ்தானுடன் காஷ்மீர்” (Stand with Kashmir) என்ற அமைப்புடன், மிகவும் நெருங்கிய தொடர்பு உடையது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்தவர்களை, பெரும் தியாகிகளாக சித்தரித்தது.
இந்து கடவுள்களை மிகவும் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும், விமர்சனம் செய்வதையே, வழக்கமான கொண்டு இருக்கும் ஆட்ரி ட்ரஸ்சிக்கு எதிராக, அவர் பணிபுரியும் ரூட்கர் பல்கலைக்கழக (Rutgers University) மாணவர்களே, புகார் தெரிவித்து உள்ளனர். அதில், ஆட்ரி இந்து மத கடவுள்களை தவறாக விமர்சனம் செய்வதாகவும், இந்து மதத்திற்கு எதிராக வீண் பிரச்சாரம் செய்வதாகவும், குற்றம் சாட்டி உள்ளனர்.
ஆனந்த் பட்வர்தன் (Anand Patwardhan):
இடதுசாரி கொள்கை கொண்டவர். இந்து மதத்திற்கு எதிராக, நிறைய வீடியோக்களை தயார் செய்து, அதனை வெளியிட்டு உள்ளார். தேச விரோத கருத்துக்களையும், பாஜக, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களையும், தவறாக விமர்சனம் செய்து, இந்து மதத்திற்கு எதிராகவும், இந்துக்கள் மீதும், தவறான முறையில் சித்தரித்து, செய்திகள் வெளியிடுவதை, வழக்கமாக கொண்டு இருப்பவர் என குற்றம் சாட்டப்பட்டவர்.
ஆயிஷா கிட்வாய் (Ayesha Kidwai):
கன்னையா குமார் போன்ற, தேச நலனுக்கு எதிராக செயல்படுபவர்களுக்காக வாதாடுபவர், அவர்களுக்கு கருணை மனு சமர்ப்பிப்பதை, வழக்கமாகக் கொண்டு இருப்பவர், இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை, பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதுவததே, இவரது வாடிக்கை, என குற்றம் சாட்டப்பட்டவர்.
பானு சுப்பிரமணியம் (Banu Subramaniam):
பழங்காலத்தில், இந்துக்கள், எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தனர் என பிரச்சாரம் செய்து வருபவர். ஆங்கிலேயர்களே, அனைத்துத் துறை முன்னேற்றத்திற்கும் காரணம் எனவும், இந்துக்கள் அறிவியல் ரீதியாகவும், புத்தி ரீதியாகவும், மிகவும் பின் தங்கியவர்கள் என தொடர்ந்து, தவறான எண்ணத்தை பகிர்ந்து வருபவர், என குற்றம் சாட்டப்பட்டவர்.
பன்வர் மெக்வன்சி (Bhanwar Meghwanshi):
“நான் இந்துவாக இருக்க முடியாது” (I could not be Hindu) என்ற புத்தகத்தை எழுதி, அதனை வெளியிட்டு உள்ளார். ஆர்.எஸ்.எஸ். பற்றி தவறான கருத்துக்களை பல இடங்களில் பேசியும், பத்திரிக்கைகளில் எழுதியும் வருபவர், என குற்றம் சாட்டப்பட்டவர்.
கிறிஸ்டோப் ஜாப்ரலர்ட் (Christophe Jaffrelot):
இந்து மதத்திற்கு எதிராக நிறைய கட்டுரைகளை எழுதி உள்ளார், என குற்றம் சாட்டப்பட்டவர்.
கவிதா கிருஷ்ணன் (Kavita Krishnan):
கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர். மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில், முக்கிய பங்கு வகிப்பவர், பொய்யான செய்தியை பரப்பி, நிறைய முறை, கையும் களவுமாக, பிடிபட்டவர், என குற்றம் சாட்டப்பட்டவர்.
மீனா கந்தசாமி (Meena Kandasamy):
பிராமணர்களுக்கு எதிராக நிறைய அவதூறுகளை பரப்பியவர், என குற்றம் சாட்டப்பட்டவர்.
நந்தினி சுந்தர் (Nandini Sundar):
தீவிர நக்சல் ஆதரவாளர், என குற்றம் சாட்டப்பட்டவர்.
நேகா தீக்ஷித் (Neha Dixit):
ஆர்.எஸ்.எஸ். ஸின் சேவை அமைப்பான, “சேவா இன்டர்நேஷனல்” பற்றி, தவறான செய்திகளை பரப்பியவர், என குற்றம் சாட்டப்பட்டவர்.
இந்த கருத்தரங்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின், பின்புலத்தை பார்த்தாலே, எந்த அளவுக்கு, இந்து மதத்தின் மீது, வன்மம் நிறைந்த கருத்துக்கள் கொண்டு இருப்பவர்கள், என்பது நமக்கு நன்கு புலப்படும்.
அமைதியையும் ஒற்றுமையையும் போதிக்கும் இந்து மதம்:
நாடு பிடிக்கும் ஆசையில், பல நூறு வருடங்களாக, நமது நாட்டை, அந்நியர்கள் அடிமைப் படுத்தி வைத்து இருந்தாலும், நமது மதத்தையும், நமது புனிதத்தையும், நமது பெருமையையும், யாராலும் அழிக்க முடியவில்லை. அதற்கு ஆணித்தரமாக விளங்கிய முக்கிய காரணம், நமது மதமே.
இந்து மதம், எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், அமைதியையும் ஒற்றுமையையுமே, கற்றுக் கொடுக்கும். யார் மீதும் தாக்கவோ, வெறுப்பை ஏற்படுத்தவோ, கற்றுக் கொடுக்கவில்லை, என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.
உலகளவில் புத்த மதத்தை கடைபிடிக்கும் நாடுகளின் எண்ணிக்கை நிறைய உள்ளன. அது போலவே, கிறிஸ்தவ மதத்தை கடைபிடிக்கும் நாடுகள், இஸ்லாமிய மதத்தை கடைபிடிக்கும் நாடுகள் என பல நாடுகள் இருந்தாலும், இந்து மதத்தை கடைபிடிக்கும் நாடு என, ஒரு நாடு கூட இல்லை.
கருத்தரங்கிற்கு எதிர்ப்பு:
வட அமெரிக்கா இந்துக்களின் கூட்டமைப்பு (Coalition of Hindus of North America – CoHNA) சேர்ந்த உறுப்பினர்கள், சுமார் 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேலான மின் அஞ்சல்களை (E Mail), பல்கலைக்கழகத்திற்கும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த கல்வியாளர்களுக்கும் அனுப்பி, அதன் மூலம், இந்துக்களின் கோபத்தை தெரிவித்தார்கள்.அந்த நிகழ்ச்சிக்கு செலவு செய்ய இருந்த விளம்பரதாரர்களுக்கும், தங்களுடைய கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பல பல்கலைக் கழகங்களும், விளம்பரதாரர்களும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் வெளியேறினர்.
இந்துக்கள் ஒரு சேர குரல் கொடுத்ததால், பயந்து போய் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் வெளியேறியது, இந்து சமுதாய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி, என அமெரிக்க வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனால், மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே, பார்வையாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைதியாக வாழும் இந்துக்கள் மத்தியில், இது போன்ற கருத்தரங்குகளை நடத்துவது, மிகுந்த வேதனை அளிப்பதாக, இந்து சமய பக்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் செய்வதற்கு முன்னர், இந்தியாவின் மீதும் இந்து சமயத்தின் மீதும் வெறுப்பை ஏற்படுத்த, இது போல கருத்தரங்குகள் நடந்து இருக்கலாம் என சிலர், தங்களுடைய சந்தேகத்தை தெரிவித்து வருகின்றனர்.
அதே அமெரிக்காவில், “இந்து ஹெரிடேஜ் பவுண்டேஷன் ஆஃப் அமெரிக்கா” என்ற அமைப்பு சார்பாக, இந்துத்வாவின் நன்மைகளை, அக்டோபர் மாதம் ஒன்று முதல் மூன்றாம் தேதி வரை, நிகழ்ச்சி நடத்த, அந்த அமைப்பு திட்டமிட்டு உள்ளது.
அதில், 18 பேர் கலந்து கொண்டு, இந்து மதத்தின் மேன்மைகளை பற்றிய, தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க உள்ளனர்.
எப்படியாயினும் இந்தியாவின் புகழையும், இந்து மதத்தின் கௌரவத்தையும், யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பது, யாராலும் மறுக்க முடியாத உண்மை.
இந்து இன்றே ஒன்று படு.. இந்து இன்றே ஒன்று படு…
- அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai
உதவிய சுட்டி: https://www.opindia.com/2021/08/a-brief-introduction-of-the-speakers-at-dismantling-global-hindutva-conference/