சட்டப்படி டிரம்ப் தவறாக இருக்கலாம், ஆனால்…!

donald trump - 2026

— ராம் மாதவ்
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

அமெரிக்க அதிரடி படையினரால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு தூக்கி செல்லப்பட்ட நிகழ்வுடன் இந்த புத்தாண்டு துவங்கியது. டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் இந்த துணிச்சலான செயலால் உலகமெங்கும் திகைப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி உருவாகியுள்ள ‘டான்ட்ரோ டாக்டரின்_ என்ற புதிய சொல்லாடலை விமர்சகர்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வசதிக்கேற்ப விளக்கி கொண்டிருக்கிறார்கள்.

ஆச்சரியப்படத்தக்க வகையில் (வெனிசுலா தலைநகரான) கராகஸ் கடந்த சில நாட்களாக அமைதியாக இருக்க, மதுரோவின் ஆதரவாளர்கள் மட்டும் ஜனவரி 4ஆம் தேதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மதுரோவின் ஆட்சியில் எங்கும் பரவி இருந்த ஆயுதமேந்திய தனியார் தீவிரவாத படையான கோலிக்டிவோ எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளையும், அமெரிக்க ஆதரவாளர்கள் என்று அவர்கள் சந்தேகப்படுபவர்களின் வீடுகளையும் தாக்கினார்கள்.

வெனிசூலாவில் டிரம்ப் ஆட்சியின் செயல் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. ஐநா சபை , சர்வதேச நீதிமன்றம் போன்ற பல பரிமாணங்களைக் கொண்ட உலக அமைப்புகளின் கையறு நிலையை இது மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தி உள்ளது.

அமெரிக்க படையினரின் செயல் திரைப்பட சாகசம் போல் இருந்தாலும் இது போன்ற ஒருதலைப்பட்சமான செயல்களில் அமெரிக்கா ஈடுபடுவது புதிதல்ல. 1983 இல் அமெரிக்க சிறப்பு அதிரடி படையினர் கிரேனேடாவில் இருந்த கம்யூனிச ஆட்சியை அகற்ற அந்த நாட்டில் அதிரடியாக புகுந்தார்கள். அதன் பிறகு ஆறாண்டுகள் கழித்து பனாமா நாட்டில் இருந்த இடதுசாரி சர்வாதிகாரியான மேனுவல் நோரிக்காவை இப்படித்தான் கைது செய்தார்கள். ஜார்ஜ் புஷ் 2003 இல் ஈராக்கின் அதிபர் சதாம் உசேனையும் இப்படிதான் ஐநாவின் அனுமதி பெறாமல் பிடித்தார். அதேபோல்தான் டிரம்ப்பும் கடந்த ஆண்டு சிரியா, ஈரானை தாக்கிய போது ஐநாவின் சம்மதத்தை கேட்கவில்லை. 2011 இல் ஒசாமா பின் லேடனை பிடிக்கும் போதும் பாகிஸ்தானின் வான்பரப்பில் நுழைய அதன் அனுமதியை அமெரிக்கா கோரவில்லை. இது போன்ற ஒவ்வொரு நிகழ்வின்போதும் உலகில் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதும் பலர் மகிழ்ச்சி தெரிவிப்பதும் நடந்துள்ளது.

ALSO READ:  குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

இந்த சம்பவத்திலும் கூட நியாயமான கோபம் தொலைக்காட்சிகளில் வெளிப்பட்டாலும் லத்தின் அமெரிக்க மக்கள் சாலைகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை. பெருவாரியானவர்கள் அமைதியாகவே இருக்கிறார்கள். இயற்கை வளம் கொழிக்கும் இந்த பகுதியில் உருவாகி வரும் அதிகார சக்திகளின் போட்டியே மக்களின் இந்த கமுக்கமான எதிர்வினைக்கு காரணம். வன்முறை, போதைப் பொருள்கள், பாதுகாப்பின்மை இவற்றிற்கு எதிரான பொதுமக்களின் மனநிலையே மிதவாத அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக திரண்டு வருகிறது.

கடந்த எண்பது ஆண்டுகளில் லத்தின் அமெரிக்கா பல்வேறு அலைகளை பார்த்து வருகிறது. 1959 இல் 32 வயதான புரட்சிகர மாணவர் தலைவரான பிடல் காஸ்ட்ரோ கியூபாவில் அதிகாரத்தை கைப்பற்றினார். அதன் மூலம் இடதுசாரி சர்வாதிகாரிகளின் அலை முதலில் கிளம்பியது. அதன் பிறகு பிரேசில், அர்ஜென்டினா, சிலி, உருகுவே, பொலிவியா, நிகரகுவா, கிரனெடா, எல் சால்வடார், பனாமா, பெரு, கெளதிமாலா என்று பல நாடுகள் அவர்களின் (இடதுசாரி சர்வாதிகாரத்தின்) கீழ் வந்தன. இது அமெரிக்க எதிர்ப்பு மனநிலையை எழுப்பியது. லத்தின் அமெரிக்கா தனது அலட்சியத்தால் பனிப்போர் போட்டியில் சிப்பாயாகி அடிபட்டது . பனிப்போர் பயத்தினால் 1980 , 90 களில் ரொனால்ட் ரீகனும் (மூத்த) ஜார்ஜ் புஷ்ஷும் கம்யூனிஸ எதிர்ப்பு தலைவர்களுக்கு ஊக்கம் அளித்தனர். அதனால் ஜனநாயக அலை வீச தொடங்கியது.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

ஆனால் இந்த புதிய நூற்றாண்டில் இடது சாய்வு கொண்ட ஆதிக்கவாதிகளின் எழுச்சி அலை மீண்டும் கிளம்பியது. இது பிங்க் அலை என்று சொல்லப்பட்டது. வெனிசூலாவில் ஹ்யூகோ சாவேஸ் , பிரேசிலில் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, அர்ஜென்டினாவில் நெஸ்டர் கிர்சினர், பொலிவியாவில் எவோ மொராலெஸ், ஈக்வடாரில் ராபாயெல் கொரெரா , உருகுவேயில் தபாரே வாஸ்குவேஸ் என சர்வாதிகாரிகள் உருவாகி , பல நாடுகளில் பிங்க் அலை பரவியது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக லத்தீன் அமெரிக்காவில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டதால் போதை பொருள், ஆயுத கும்பல்களின் அபாயகரமான வளர்ச்சி ஏற்பட்டது. ஐநா அமைப்பின் மதிப்பீட்டின்படி உலகில் 3700 டன் கோகெயின் போதைப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. அதை தயாரிக்க பயன்படும் கச்சா பொருளான கோகா உலகில் பொலிவியா, பெரு, கொலம்பியா என்ற மூன்றே நாடுகளில் உற்பத்தியாகிறது.

ஒட்டுமொத்த லத்தின் அமெரிக்காவும் போதை பொருள் களமாகியுள்ளது. ஆயுத, போதை பொருள் வியாபாரத்தால் மாபியா தலைவர்களும் அரசியல் தலைவர்களும் செல்வந்தர்கள் ஆகியுள்ள நிலையில் சாதாரண மக்கள் வன்முறை, குற்ற செயல்களால் பாதிக்கப்பட்டனர்.

இப்போது, (இடதுசாரி சர்வாதிகாரத்திற்கு எதிரான) மிதவாத / பழமைவாத அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் எழுச்சி பெற்று வருகிறார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்த டிரம்ப் இந்த பகுதியில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். போதைப் பொருள் மாபியா மற்றும் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான போரை துவங்கியுள்ளார். அர்ஜென்டினாவில் மிதவாத தலைவரான ஜேவியர் மிலே தலைமையிலான ஆட்சிக்கு இருபது மில்லியன் டாலர் உதவி வழங்கியுள்ளார். இது அந்த பகுதியில் பெருத்த ரீங்காரத்தை எழுப்பி உள்ளது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

ஈக்வடார் மிதவாத தலைவரை மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்துள்ளது. பொலிவியாவில் கடந்த இரண்டு தசாப்தங்களாக இருந்த கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. பிரேசில் , கொலம்பியா, கோஸ்டா ரிக்கா, பெரு நாடுகளிலும் மிதவாத தலைவர்கள், கட்சிகள் எழுச்சி பெற்று வருகின்றன.

லத்தீனோபாரோமெட்ரோ என்ற சிசிலியன் அமைப்பு நடத்திய ஆய்வு கடந்த இரண்டு தசாப்தங்களில் 18 நாடுகளில் வலதுசாரிகளின் ஆதரவு இதுவரை எட்டாத உச்ச நிலைக்கு வளர்ந்துள்ளதாக கூறுகிறது. அந்த ஆய்வின்படி லத்தின் அமெரிக்க பகுதியில் பொதுமக்கள் மதிப்பில் எல் சால்வடாரின் வலதுசாரி ஜனாதிபதியான நயீப் புக்கெலே முதலிடத்திலும் வெனிசுலா அதிபர் மதுரோ கடைசி இடத்திலும் உள்ளார்கள்.

சர்வதேச சட்டங்களின் பார்வையில் டிரம்ப் தவறிழைத்தவராக இருக்கலாம். ஆனால் கருத்தியல் மற்றும் புவியரசியலில் அவர் கை ஓங்கி இருப்பதாகவே தெரிகிறது.


கட்டுரையாளர் தில்லியில் உள்ள இந்தியா பவுண்டேசனின் தலைவர்

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories