சைவத்திற்குள் புகுந்த கறுப்பு திராவிட ஆடுகள் [கட்டுரை: சிவதீபன்]
கடந்த இரண்டு மாதங்களாக “மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்” என்ற நூல் அடியார்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்து வருகிறது, இதனில் சைவ சமய அடியார்களுக்கும் நூலிற்கு ஆதரவு செய்யும் நல்லூர் சரவணன் அவர்கள் தரப்பினருக்கும் பதிவுகள் மூலமாக கருத்து பரிவர்த்தனைகள் நிகழ்ந்தன, பின்னர் திருப்பெருந்துறையில் அடியார்கள் உண்ணாவிரதம் இருந்தனர், பிறகு நல்லூர் சரவணன் அவர்கள் பேசும் இடங்கள் தோறும் எதிர்ப்பு எழுந்தது அவர் திருவான்மியூர் ஆலயத்தில் சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட்டார் பின்னர் வள்ளுவர்கோட்டத்தில் ஒரு போராட்டம், தொடர்ந்து சென்னை பல்கலை கழக வளாகத்தில் அவருக்கு எதிரான முன்னெடுப்புகள் நிகழ்ந்தன,
இத்தனை சம்பவங்களுக்கு பிறகு என்ன வெளியாகி இருக்கிறது என்றால் *”நல்லூர் சரவணன் அவர்களுக்கு பின்னால் மதமாற்ற அரசியலும் திராவிட கடவுள் மறுப்பு சாதிய அரசியல் செய்பவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் அது”*
இதுநாள் வரை உள்ளுக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்த பூனை தற்போது வெளியே வந்துவிட்டது, எண்ணிப் பாருங்கள் *”மாணிக்கவாசகப் பெருமான் சைவசமயத்தின் குருநாதர் அவரை அவமதித்ததாக குற்றம் சாட்டப் படுபவர் சைவசித்தாதந்த பெருமன்றத்தின் தலைவர், குற்றம் சாட்டுபவர்கள் மாணிக்கவாசகரை குலதெய்வமாக போற்றும் சைவசமய அடியார்கள்”* எனில் இது ஒரு குடும்பத்திற்குள் கொள்கையளவில் ஒன்று பட்டுள்ளவர்களிடம் நடக்கும் கருத்து மோதல்தானே!?
இதற்கு நல்லூர் சரவணன் அவர்களுக்கு ஆதரவாக பஞ்சாயத்து பேசுவதற்கு யார்யாரெல்லாம் வருகிறார்கள் என்று பார்த்தால் தலித்திய அரசியல் பேசும் திருமாவளவன் வருகிறார், கூடங்குள அணுமின் நிலைய போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப உதயக்குமார் வருகிறார், பல்கலைகழகத்தின் பெரியார் அம்பேத்கர் வாசக வட்டத்தினர் வருகிறார்கள். புத்தக எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக அர்ஜுன் சம்பத் அவர்கள் வரவில்லையா!? ஹெச்.ராஜா அவர்கள் வரவில்லையா!? என்று கேட்டால் இவர்கள் இருவரும் சிவபெருமானை வணங்குகின்றவர்கள் மாணிக்கவாசகரை அருளாளராக வழிபடுபவர்கள், சைவ சமயத்தில் ஒரு சர்ச்சை புகுந்தால் ஒரு சமயவாதியாக அவர்களுக்கும் நேரடியான பாதிப்பு இருக்கின்றது, கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்ற குடும்பத்தில் இவர்களும் ஒரு அங்கத்தினர் அதனால் வந்தார்கள், நல்லூர் சரவணனும் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்ற குடும்பத்தில் உள்ளவர் எனில் எங்களுக்குள் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்கின்றோம்.
ஈவெரா அம்பேத்கர் திருமாவளவன் உதயக்குமார் போன்றவர்களுக்கும் *”சைவசித்தாந்த சமயத்திற்கும் என்ன சம்பந்தம்?? இவர்களுக்கு சிவபெருமானைத் தெரியுமா?? சித்தாந்த சாத்திரங்களின் அடியெழுத்தாவது தெரியுமா?? திருமுறைகளை இழித்து பேசிய திமுக ஆதரவாளனுக்கு திருமாவளவன் இதுவரை ஒரு கண்டனமாவது பதிவு செய்துள்ளாரா!? அம்பேத்கர் பௌத்த சமயத்தை சார்ந்து வாழ்ந்த ஒரு பௌத்தர், உதயக்குமார் கிறித்தவர் ஈவெரா பற்றி சொல்லவே வேண்டியதில்லை எனில் இவர்கள் ஏன் வருகிறார்கள்!? இவர்களை சார்ந்தவர்கள் ஏன் இங்கு வருகிறார்கள்!? இவர்கள் வந்ததற்கு நாமெல்லாம் என்ன இடம் கொடுத்து இருக்கிறோம்!?”* என்று சற்று சிந்தித்தால் புரிந்து விடும்
கொஞ்ச நாள் முன்பாக நல்லூர் சரவணன் அவர்கள் பேசிய வீடியோ ஒன்றில் *”சைவ சமய முதல் ஆச்சார்யரான திருஞானசம்பந்தப் பெருமான் “வேதநெறி தழைத்து ஓங்கி மிகு சைவத்துறை விளங்கும்படியான” அவரது அவதார நோக்கம் பூர்த்தியாகும் நேரத்தில் வைகைக்கரையில் பாடிய “வாழ்க அந்தணர்” என்ற பாடலை பாடக்கூடாது என்றும் சைவ சமயத்தின் மூன்று கண்களில் ஒன்றாகப் போற்றப் பெறும் கந்தபுராணப் பாடலான “வான்முகில் வழாது பெய்க” என்ற பாடலையும் பாடக்கூடாது என்றும் பேசினார்”*
அதற்கு அவர் சொன்ன காரணம் *”வாழ்க அந்தணர் என்று வருவதாலும் நான்மறை அறங்கள் ஓங்க”* என்று வருவதாலும் தான் என்கிறார் இவருக்கு ஏன் அந்தணர்கள் மீதும் நான்மறைகள் மீதும் அப்படி ஒரு எதிர்ப்பு!? என்றால் அவரது மனதில் வேரூன்றி இருக்கும் *”பார்ப்பன எதிர்ப்பு அரசியல் சிந்தனையே அன்றி வேறில்லை”*
பார்ப்பன எதிர்ப்பு வேத எதிர்ப்பு வடமொழி எதிர்ப்பு என்பது முழுக்க முழுக்க திராவிட அரசியலின் சிந்தனை, இந்த திராவிட அரசியல் என்பது இந்து மதத்தை அழித்து வேத சாத்திரங்களை அழித்து கிறித்தவ இஸ்லாமியம் என்னும் மிலேச்ச மதங்களை ஸ்தாபிப்பதே ஆகும், அதற்கு வாழும் உதாரணங்களாக இன்றைய திராவிட அரசியல்வாதிகளும் அவர்களது அடிவருடிகளும் திகழ்ந்து வருகிறார்கள்
இதற்கு இவர்கள் கையில் எடுத்து கொண்ட ஆயுதம் போலியான விவேகமற்ற தமிழ்மொழி பற்றுணர்வு, இராவணன் ஹீரோ, ஆரிய படையெடுப்பு, தமிழ்வேள்வி முறைகள் போன்ற செயல்பாடுகள் ஆகும்
மேற்சொன்ன கருத்துருக்களில் எவர் ஒருவர் ஈடுபாடு கொண்டவராக இருக்கிறாரோ அவர்கள் நிச்சயம் சமஸ்கிருத எதிர்ப்பாளராக அந்தண எதிர்ப்பாளராக தமிழ் வேள்வி ஆதரவாளர்களாக இருப்பார்கள் (இங்கு தமிழ் வேள்வி ஆதரவாளர் என்று குறிப்பிடப் படுபவர்கள் தமிழ் பாடல்களை பாடி வேள்வி முதலான கிரியைகளை செய்பவர்கள் ஆவார்கள், அடியேன் திருமுறைகள் இருந்தால் போதும் சரியை கிரியை யோகம் ஞானம் என்ற மார்க்க வழி கூட நிற்காமல் பூவும் நீரும் இட்டு தமிழ்பாடல்களை பாடியும் இறைவர் திருவடியை எளிதில் அடையலாம் என்ற ஆச்சார்யர்களின் வழி நிற்பவன், தமிழ் வேள்வி என்பது அடியேனுக்கு என்றும் உடன்பாடானது இல்லை இப்படி சொல்வதால் என்னை தமிழ் உணர்வு இல்லாதவன் ஆரிய அடிவருடி தமிழ் மொழி எதிர்ப்பாளன் என்று எண்ணினால் அதுபற்றி எமக்கு கவலை இல்லை).
மிக முக்கியமாக அவர்கள் திராவிட அரசியல் தலைவர்கள் மீது நிச்சயம் ஈடுபாட்டுடன் இருப்பார்கள் இவர்கள் எப்போதும் அந்த அரசியல் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருப்பார்கள்
இதற்கு மிகச்சிறந்த உதாரணம் யாதெனில் *”வெகு சமீபத்தில் திராவிட இயக்க தலைவர் கீ.வீரமணி அவர்களுடன் தமிழாகம பண்டிதர் என்று அறியப்பெறும் ஒருவர் கைக்கோத்து ஏதோ நிகழ்வில் ஈடுபடப்போவதாக வெளிவந்த ஒரு போஸ்டர், அதனை பார்த்ததும் சிரித்து விட்டு நிராகரித்து விட்டேன் விவரம் தற்போது நாபகம் இல்லை”*
தமிழ் வேள்வி செய்பவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள், அவர்களுக்கு கடவுள் இல்லை என்பவர்களுடன் என்ன கூட்டு வேண்டியிருக்கிறது!?
இந்த கேள்வி தமிழ்வேள்வி காரர்களை பகிரங்கமாக குற்றம் சாட்டுவது போல தோன்றும், ஆனால் அது உண்மை இல்லை *”யார் ஒருவர் தமிழ் வேள்வி வழியில் நிற்கிறாரோ அவர்கள் உண்மையான அடியவர்கள்தான், அவர்களது தமிழ் வேள்வி முறை வழிபாடுகளை அடியேன் எதிர்க்கவில்லை குற்றம் சொல்லவில்லை அதில் நமக்கு கருத்து வேறுபாடு இருந்தால் கடவுள் நம்பிக்கை இருக்கும் நமக்குள் பேசிக்கலாம் ஆனால் அவர்கள் கடவுள் மறுப்பாளர்களுடன் இணங்குவதன் அவசியம் என்ன?? அப்படி இணங்குவதால் நம்முடைய உண்மையான தமிழ்பற்றும் தமிழுணர்வும் கடவுள் பக்தியும் இந்த திராவிட கைக்கூலி மதமாற்ற கைக்கூலிகளின் தேவைக்கு தீனியாக அமைகின்றது என்பதனை நாம் எப்போது புரிந்து கொள்ளப்போகின்றோம்?”*
தமிழ் வேள்வி செய்பவர்கள் யாவரும் ஆங்கிலேயர்கள் மொழிப்பெயர்த்து வைத்த வேதக்கருத்துக்களை படித்தவர்களாகவே இருக்கிறார்கள், அதனைக்கொண்டே வேதம் என்பது இதுதான் அது தவறானது என்று பேசுவார்கள், எவர் ஒருவர் நேரடியாக வேதத்ததை படிக்கவில்லையோ அல்லது வேதம் இருக்கும் மொழியை தானே கற்று படித்து கடவுள் பக்தி உணர்வுடன் சொன்னவர்கள் சொன்னதை உணரவில்லையோ அவர்கள் சொல்வது எப்படி வேதத்தினை பற்றிய சரியான புரிதலாக இருக்க முடியும்!?
காலங்காலமாக நம் நாட்டு பேரறிஞர்கள் வேதத்தின் மொழியில் வேதத்தினை படித்து அதனை பல்வேறு ஆலயங்களில் செயல்படுத்தி காட்டும் பெரியோர்கள் சொல்வதனை உண்மை இல்லை என்று மறுப்பது நியாயமும் ஆகாது!! அதற்காக அந்தணர் என்ற குலத்தில் பிறந்து வேதம் படித்து ஆச்சார்யர் ஆகிவிட்டால் அவர்கள் என்ன செய்தாலும் கண்மூடி கொண்டு ஆதரிப்பவனுமல்ல அடியேன், வடமொழி ஒரு குலத்திற்கு மட்டும் சொந்தமல்ல வேதம் எல்லோருக்கும் பொதுவானது அதன் வழி நிற்கும் உத்தம அந்தணர்களை ஆதரிப்பது சமயவாதியின் கடமை என்ற திருமுறைகளின் வழி நிற்பவன் அடியேனாவேன்.
சைவ சித்தாந்த சாத்திர முப்பொருள் உண்மை வினைக் கொள்கைகளை சரியாக புரிந்த அடியார்கள் *”வேதியர் தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்கும் துணையாகேன்”* என்ற சுந்தர மூர்த்தி சுவாமிகளின் வழி நின்று அனைத்து மொழிகளும் இறைவனுக்கு முன்பு சமம் அவருக்கு முன்பு எந்த பற்றும் செல்லாது என்று நிற்கும் அடியார்கள், இந்த பிரச்சனையில் ஆரிய திராவிட போராட்ட அரசியல் வாதிகளின் என்ட்ரியை கணித்தபடியே கண்டு சிரித்திருக்கிறோம்
தமிழ்வேள்வி ஆதரவு உள்ளவர்கள் அதில் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் இரு தரப்பினருக்கும் இருக்கும் தமிழ் பற்று ஒன்றுதான்,
ஆனால் எங்களுக்கு இருக்கும் தமிழுணர்வு இறைவனின் கருணையின் அடிப்படையில் நாயன்மார்களின் சொல்லாட்சியால் தமிழ்மொழியின் வளத்தால் பிறந்தது
உங்களது தமிழ்பற்று அரசியல் சார்ந்த தேவைகளால் நம் நாடு நம் ஆட்சி நம் மொழி என்ற பற்றால் உண்டானது,
அதற்குள்தான் இன்று திருமாவளவனும் சுப உதயகுமாரும் ஈவெராமசாமியும் அம்பேத்கரும் வீரமணியும் புகுந்துள்ளார்கள்
இவர்கள்தான் நல்லூர் சரவணன் கொண்டுள்ள தமிழ்பற்று அந்தண எதிர்ப்பின் பின்னணியில் உள்ளவர்கள், நம்முடைய அடியார்கள் பலர் கொண்டுள்ள தமிழ்பற்று தமிழ்முறை வேள்வி வேத எதிர்ப்பு அந்தண எதிர்ப்பு போன்றவற்றிற்கு பின்னாலும் இதே போன்ற திராவிட மதமாற்ற சூத்திர தாரிகள்தான் ஆதிகாலம் தொட்டே இருக்கின்றனர், அதனை சரியாக மறைத்து அடியார்களின் தமிழ் உணர்வு என்ற பற்று மனநிலையின் மீதே நம்முடைய வேத ஆகம வழிபாடுகளை குலைக்கும் படி இவர்களால் படிப்பிக்கப் படுகிறார்கள்
இதனை சரியாக ஒப்பீட்டளவில் புரிந்து கொள்ள இதுவே சரியான தருணம் இப்பொழுதே சுதாரித்து கொண்டால் நலம் இல்லை என்றால், கடவுள் இல்லை என்று நம்மையும் நம்ப வைத்து சிலுவையை கழுத்திலும் தொப்பியை தலையிலும் மாட்டிவிட்டு அவர்கள் பணத்தை எண்ணி கொண்டிருப்பார்கள்
*திருச்சிற்றம்பலம்*
கட்டுரை: சிவதீபன்





Boring article