அரசு மருத்துவமனையில் மரணித்தவர்கள்..! ஏனென்றால்… இவர்கள்…

Published:

vajpayee arunjaitley sushma parikhar - 2026

தன்னால் தன் கையை கூட அசைக்க முடியாது என தெரிந்து, தான் சாகும்போதும் பதவியில் இருக்க வேண்டும் என நினைக்க அவர்கள் கருணாநிதி இல்லை.

மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஆள வேண்டும் என நினைக்க எம்ஜியாரோ, ஜெயலலிதாவோ இல்லை.

தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அப்பலோ, காவேரி என மருத்துவமனைகளுக்குப் போகவில்லை.

அவர்கள் நினைத்திருந்தால் பதவியில் இருந்து கொண்டே இறந்திருக்கலாம். ஆனால் பதவி மோகம் அவர்களை பிடிக்கவில்லை!

சாதாரண மனிதனாக வாழ்ந்து, சாதாரண மனிதனுக்காக கட்டிய எய்ம்ஸ் அரசு மருத்துவமனையில் ஒரு சாதாரண மனிதனாகவே தன் இறுதி மூச்சை விட்டனர்.

வாஜ்பாய்… மனோகர் பாரிக்கர் … சுஷ்மா ஸ்வராஜ்… அருண்ஜெட்லி… ஏனென்றால் இவர்கள் ஆர்.எஸ்.எஸ் பாசறையில் பயின்றவர்கள்!

vajpayee arunjaitley sushma parikhar1 - 2026

இதே போன்று குறுகிய கால இடைவெளிகளில் தொடர்ந்து இவ்வளவு முன்னணி தலைவர்கள் இறந்திருந்தால் வேறு எந்த ஒரு கட்சியும் நிலைகுலைந்து போயிருக்கும். ஆனால் பாஜக உறுதியாக நிற்கிறது.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. மூன்று எழுத்து தான்.

ஆர் . எஸ் . எஸ்

தனி மனிதன் முக்கியமில்லை சித்தாந்தமே முக்கியம் என்கிற அடிப்படையில் வளர்த்தெடுக்கப்படும் பொழுது இது சாத்தியமாகிறது. இளையவர்கள் முன்னேறி வருகிறார்கள். வயதானவர்கள் வழி விட்டு நிற்கிறார்கள்.

வாரிசு அரசியல் ஊக்குவிக்கப்படுவது இல்லை. மற்ற கட்சிகளில் அரிதாக நிகழும் இந்நிகழ்வு பாஜகவில் அன்றாடம் நிகழ்கிறது.

  • கா.குற்றாலநாதன்

Related articles

Recent articles

spot_img