
மதுரை: திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக., மாநிலங்களை உறுப்பினரும் மூத்த தலைவருமான இல.கணேசன் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சோபியா என்ற பெண் செய்த செயலை ஆதரித்ததன் மூலம், நாளை உங்களுக்கும் அதே நிலைதான் என்று கூறியுள்ளார்.
மதுரை மாவட்ட பாஜக., நிர்வாகி வீட்டு திருமண விழாவில் பங்கேற்க மதுரைக்கு வந்திருந்தார் தமிழக இல. கணேசன். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், இன்றைய பரபரப்பு செய்தியாக பேசப்பட்டு வரும் தமிழிசை சௌந்தர்ராஜன், சோபியா விவகாரம் குறித்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர்,
தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்ற தமிழிசையிடம் அந்தப் பெண் அநாகரீகமாக நடந்து கொண்டது பண்பாடற்ற செயல். என்றால் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் தலைவர்களும் கண்டனத்துக்கு உரியவர்களே.
பாரதிய ஜனதாவை பொருத்த வரை எங்களுக்கு எதிர்க் கட்சிகள் தேவை, அவர்களின் விமர்சனமும் தேவை. அப்போதுதான் எங்கள் கட்சி சரியாக செயல்பட முடியும். திமுக.,வின் புதிய தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் பக்குவம் இல்லை. முதல் நாளில் இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்துவிட்டு, அடுத்த நாளே மற்ற கட்சிகளை விமர்சனம் செய்கிறார்.
50 ஆண்டு கால அரசியலில் சாதனையாளராக வலம் வந்த கருணாநிதியுடன் அரசியல் செய்து கொண்டு இப்படி பக்குவமற்ற முறையில் பேசுகிறார். இது அவருக்கு நல்லதல்ல, இன்னும் அவர் பண்பட வேண்டும்.
தூத்துக்குடி விமானத்தில் நடந்த சம்பவத்தைப் பொருத்தவரை அந்தப் பெண் செய்தது திட்டமிட்ட செயல். அவருக்கு கடுமையான தண்டனை கொடுத்தால்தான் அதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது… என்று கூறினார் இல.கணேசன்.
ஆனால், கருணாநிதியும் இதை விட ஒரு படி மேலானவரே. பாஜக.,வுடன் கூட்டணி இருந்த போது ஒரு பேச்சும், இல்லாத போது ஒரு பேச்சும், பேசியவர். முதல் நாள் கூடிக் குலவி, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, மறுநாளே வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக., தலைவர்களை பண்டாரம் பரதேசிகள் என்று வாய் நிறையப் பாராட்டியவர். தாய் எட்டடி என்றால், குட்டி பதினாறு அடி பாய்வது இயற்கைதான்! அதைவிட, தன் தந்தை நல்லவர் என்று ஆக்க, அவரைக் காட்டிலும் அராஜகங்களைத் தாம் செய்தால்தான், ஒரு அரக்கரையும் மக்கள் நல்லவன் என்று பின்னாளில் கூறுவர். அதைத்தான் மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார் என்றே விமர்சிக்கப் படுகிறது!




௨ணà¯à®®à¯ˆ தானà¯. பà¯à®²à®¿à®•à¯à®•௠பிறநà¯à®¤à®¤à¯ பூனை ஆகà¯à®®à®¾? தொடà¯à®Ÿà®¿à®²à¯ பழகà¯à®•ம௠சà¯à®Ÿà¯à®•ாட௠மடà¯à®Ÿà®®à¯! நாய௠வாலை நிமிரà¯à®¤à¯à®¤ à®®à¯à®Ÿà®¿à®¯à®¾à®¤à¯ எனà¯à®ªà®¤à¯ ௨ணà¯à®®à¯ˆà®¤à®¾à®©à¯?