இன்று புதாஷ்டமி! வழிபாட்டின் சிறப்பு தெரியுமா?

Published:

Hindu Goddess Of Learning Saraswathi Devi - 2026

புதனும் அஷ்டமியும் சேர்ந்து வருவது புதாஷ்டமி! இந்த புதாஷ்டமி வழிபாடுகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதன் சிறப்பைத் தெரிந்து கொள்ளுங்கள்!

கண்ணுக்குப் புலனாகாது மறைவு நதியாய்ப் பரிணமிக்கும் *சரஸ்வதி நதி* போலவே, கபாலமும் வெளிக் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்ற மனித உள்அங்கமாகும்.

கபாலத்தின் உள்ளும் “வித்யா தீர்த்தம்” என்ற புலப் புனலோட்டம் ஒன்று உண்டு. இது புதாஷ்டமி, மற்றும் புதனோடு பௌர்ணமி கூடும் திருநாளிலும் நன்கு ஆகர்ஷணம் பெற்று விருத்திக்கு வரும்.

புதாஷ்டமித் திதியிலும், பௌர்ணமி கூடும் புதன் கிழமையிலும் கல்விச் செல்வத்தை விருத்தி செய்து தர வல்ல *சரஸ்வதி தீர்த்தம், சரஸ்வதி நதிகளிலே நீராடுதலும், அபிஷேகித்தலும், சிரசில் தெளித்துக் கொள்தலும், அன்னதானத்தில் சேர்த்து அன்னதானம் அளித்தலும்* விசேஷமானதாகும்.

குறைந்த படிப்பு எனத் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் முன்னுக்கு வர இது உதவும். அதிகப் படிப்பு படித்தும் குறைந்த சம்பளம், தகுதிக்கு ஏற்ற வேலையின்மை போன்றவற்றால் தாழ்வு மனப்பான்மை கொண்டு வேதனையுறுவோர்க்கும் நல்ல நிவர்த்தியைத் தர வல்ல பூஜை நாள்.

  • ராஜசேகர வாத்யார், திருநெல்வேலி
ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img