என் மீது வேண்டுமென்றே போலீசார் பொய் வழக்குகளை பதிவு செய்தனர்! சில வழக்குகள் பொய் என்று நீதிமன்றத்திலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது என்று எளிமையான வாழ்க்கையால் மத்திய இணை அமைச்சர் ஆன பிரதாப் சாரங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார்
ஒடிசா மாநிலம் பாலாசூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் பிரதாப் சந்திர சாரங்கி! 64 வயதான இவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். பழங்குடியின மக்களின் நல்வாழ்வுக்காக சேவைகள் பல செய்து வருகிறார்! சைக்கிளில்தான் வலம் வருகிறார்! வேறு சொத்துக்கள் என்று எதுவும் இல்லை!
ஒடிசாவின் மோடி என்று இவரை மக்கள் புகழ்கின்றனர்! இவருடைய எளிமை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது! சமூக வலைதளங்களில் பலரும் ஹீரோ போன்று கொண்டாடினர்!
இந்நிலையில் கடந்த 99 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அப்போது ஒடிசா பஜ்ரங்க் தளத்தின் தலைவராக இருந்த சாரங்கியின் தொடர்பு உள்ளது என்று செய்திகள் பரவின.
அதேபோல் கடந்த 2002ஆம் ஆண்டு ஒடிசா சட்டப்பேரவை மீது தாக்குதல் நடத்தப்பட்டது இதிலும் சாரங்கியை போலீசார் கைது செய்தனர்! ஆனால் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்!
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சாரங்கி கூறிய போது, என் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் எல்லாம் பொய்யான புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவை! போலீசார் வேண்டும் என்றே என் மீது வழக்குகளை பதிவு செய்து வந்தனர்
காவல்துறையில் ஊழலை எதிர்த்து நான் போராடினேன்! போலீசார் லஞ்சம் வாங்குவதை எதிர்த்தேன்! சமூக நலனுக்காக நான் போராட்டங்கள் பல நடத்தியதை ஊழல் போலீஸ் அதிகாரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! எனவே தான் என் மீது வழக்குகள் பதிவு செய்தனர்!
ஆனால் அந்த வழக்குகள் பலவும் பொய்யானவை என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க பட்டுவிட்டன! அதே போல் மீதமுள்ள வழக்குகளும் பொய்யென நிரூபிக்கப்படும்.
அதேபோல் ஆஸ்திரேலிய பாதிரியார் கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை அதுவும் தேவையற்ற வகையில் என்மீது அவதூறு கிளப்பி வருகிறார்கள்! குறிப்பாக சமூக வலைதளங்களில்” என்று பிரதாப் சந்திர சாரங்கி கூறியுள்ளார்!




