நெல்லை அமமுக., நிர்வாகிகள் கூண்டோடு விலகல்! அதிமுக.,வில் இணைப்பு!

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்

ammk - 2026

நெல்லை மாவட்ட அமமுக.,நிர்வாகிகள் கூண்டோடு விலகி இன்று மாலை முதல்வர் முன்னிலையில் அதிமுக.,வில் இணைந்துள்ளனர்.

டிடிவி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.,வினர் கடந்த மக்களவைத் தேர்தலை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொண்டனர். ஆர்.கே.நகர், இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றியைப் போலவே தமிழகம் முழுவதும் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில் கோடிகோடியாக செலவழித்தனர்.

ஆனால், அமமுக., சார்பில் போட்டியிட்ட அனைவரும் மோசமான தோல்வியை தழுவினர். அதிக பட்சமாக நான்கைந்து பேர் மட்டுமே ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்றனர்.

எனவே இனியும் அங்கு நீடிக்க இயலாத நிலையில் தற்போது மீண்டும் அ.தி.மு.க.,விற்கு திரும்பி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்த ஆர்.பி.ஆதித்தன். அண்ணாமலை உள்ளிட்டோர் ஏற்கனவே முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்து விட்டனர்.

இந்நிலையில் இன்று மாலை திருநெல்வேலி மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் மைக்கேல் ராயப்பன், வி.பி.மூர்த்தி, அசன்ஜாபர்அலி உள்ளிட்ட நெல்லை, துாத்துக்குடி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர். இவர்களில் மைக்கேல் ராயப்பன் நெல்லை தொகுதியில் போட்டியிட்டவர்.ammk to admk - 2026

அடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கியப் பிரமுகரான முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவும் அதிமுக.,வில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப் படுகிறது. இதனிடையே, நாளை செவ்வாய்க்கிழமை அன்று மாலை பழைய குற்றாலம் இசக்கி ரிசார்ட்ஸ்ஸில் வைத்து முன்னாள் அமைச்சர், கழக அம்மா பேரவை இணை செயலாளர் இசக்கி சுப்பையா தலைமையில் அமமுக நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக கூறப்பட்டது. இந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து நெல்லை மாவட்ட அமமுக.,வினரின் புத்திசாலித்தனமான முடிவு தெரியும் என்கிறார்கள்.

1 thought on “நெல்லை அமமுக., நிர்வாகிகள் கூண்டோடு விலகல்! அதிமுக.,வில் இணைப்பு!”

  1. à®….à®®.மு.க கொஞ்சம் கொஞ்சமாக ” அனைத்து மக்களாலும் முறியடிக்கப்பட்ட கழகம்” என்று மாறிக்கொண்டு வருகிறது. அம்மா என்ற ஒரு வார்த்தை, அவரது ஜெயா தொலைக்காட்சி மற்றும் பண பலம் இவற்றின் மூலம் மட்டுமே ஆட்சிக்கு வந்துவிட முடியாது. இதை இந்தக் கட்சியின் தலைவர்களும் உறுப்பினர்களும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் மனதில் இடம்பெற ஏதாவது தொண்டு அல்லது சேவை செய்ய வேண்டும். இதுவரை இந்த கட்சி அப்படி என்ன செய்து சாதித்தது? சென்னையின் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. கடல் நீர் சுத்திகரிப்புக்கு ஒரு நடவடிக்கையையும் காணோம். சூரிய ஒளி மின்சாரம் என்பது பற்றி தமிழக மின் துறை அமைச்சருக்கு தெரியுமா தெரியாதா? இயற்கை தரும் வளங்களை நல்ல முறையில் உபயோகிக்க தெரியவில்லை. அவர்கள் வீட்டில் மின்சாரம் தண்ணீர் பற்றாக்குறை உண்டா? மக்கள் எக்கேடு கெட்டும் போகட்டும். தண்ணீர் தட்டுப்பாட்டால் காக்கைகள் கூட செத்து விழுகின்ற அவலம் இப்போது தமிழ் நாட்டில். ஏரித்தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி அதற்கு விளம்பரம் செய்த அமைச்சர் உள்ளதாயிற்றே தமிழ்நாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.