மின் கணக்கீட்டு அட்டையில் கிறிஸ்துவப் பிரசாரத்தை மேற்கொண்ட மின் கணக்கீட்டாளர் உள்பட மி வாரிய ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளிகொண்டா மின்சார அலுவலகத்தில் மின் கணக்கீடு அட்டையில் கிறிஸ்துவ மதப் பிரசாரத்தை அச்சிட்டு மக்களுக்கு வழங்கிய விவகாரம் பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதமாற்ற பிரசாரத்தை அரசின் மின் கணக்கீட்டு அட்டையில் எவ்வாறு அச்சிட்டு வழங்கலாம் என இந்து இயக்கங்கள் கொந்தளித்தன.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளிகொண்டா மின்அலுவலகம் முன்பு இந்து முன்னணி சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது!
இப்போராட்டத்தில் மின் கூடுதல் இயக்குனர் S சீனிவாசன் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்துமுன்னணி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றேன்; போராட்டத்தை கைவிட வேண்டுமாறு கோரிக்கை வைத்தார். இதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது
இந்நிலையில், கிறிஸ்துவ மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மின் கணக்கீட்டாளர் ஜெயதேவன் மற்றும் மூன்று ஊழியர்களை பணியிடம் நீக்கம் செய்யப்பட்டனர்.




