வேப்ப இலை ஸ்பெஷல்! அழகோ அழகு!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
neem 1 - 2026

உங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு கெமிக்கல் அல்லாத பொருளினால் பொலிவு ஏற்படுத்த விரும்பினால் வேப்ப இலை சிறந்தது. நம் நாட்டில் வேப்ப மரம் ஈசியாக வளரும் என்பதால் இதை எங்கும் எளிதாகக் காணலாம்.

சருமத்திற்கு:

உங்கள் முகப்பரு பிரச்சினைகளை இயற்கை வழியில் சீர் செய்ய ஒவ்வொரு நாளும் வேப்ப இலைகளைப் பயன்படுத்துங்கள். வேண்டிய அளவிற்கு வேப்ப இலைகளை எடுத்து பேஸ்ட் போல அரைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

வேப்ப இலைகள் அன்டி-பாக்டீரியல் ஆகவும் உதவக் கூடியது. எனவே, உங்கள் உடலில் தோல் தொற்று அல்லது சிறு காயம் இருந்தால், அதற்கு சிகிச்சையளிக்க வேப்ப இலைகளைப் பயன்படுத்துங்கள்.

கூந்தலுக்கு:

வேப்ப இலைகளை சுமார் 15 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க விடவும். அந்த தண்ணீரை பயன்படுத்தி ஷாம்பூ செய்தப் பிறகு கூந்தலை அலசுங்கள். இது பொடுகு மற்றும் முடி உதிர்வதை தடுக்க உதவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.