சாம்பல் பூசணி! எப்படி எல்லாம் மருத்துவ பயன் தருது பாருங்க..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
poosani kai - 2026

சாம்பல் பூசணி, மஞ்சள் பூசணி என்று அழைக்கப்படும் இதனை சர்க்கரை பூசணி, சர்க்கரைப் பரங்கி, பரங்கிக்காய் என்றெல்லாம் குறிப்பிடுவர். பரங்கிக்காயின் சதைப்பற்று மென்மையான மயக்க மூட்டி, மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுவது, குளிர்ச்சியூட்டக் கூடியது. காயங்களின் மேற்பற்றாக போடுவதற்கு பயன்படுகிறது.

தீப்புண்களை ஆற்றும் தன்மையது. வீக்கங்களைக் கரைக்கும் தன்மையது, கொப்புளங்களை குணப்படுத்த வல்லது. பரங்கிக்காயின் விதைகள் சிறுநீரைப் பெருக்கக் கூடியது. நாடாப்புழு போன்ற வயிற்றுப் பூச்சிகளை வெளித்தள்ளக் கூடியது. பரங்கிக்காயின் விதைகள் ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தை தடுக்கவல்லது.

சிறு நீரக கோளாறுகளையும் போக்கும். பரங்கிக்கொடியின் இலைகளில் சுண்ணாம்பு சத்து (100 கிராம் இலையில்) 36.38 மி.கி. அளவும், மெக்னீசியம் 38.80 மி.கி. அளவும், இரும்புச்சத்து 2.04 மி.கி. அளவும், துத்தநாகச் சத்து 0.76 மி.கி. அளவும், செம்புச் சத்து 0.42 மி.கி. அளவும் அடங்கியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பரங்கிக்காயின் விதையில் இருந்து பிரிக்கப்படும் எண்ணெயில் ஸ்டிரால்ஸ் மற்றும் ட்ரைட்டர் பினாய்ட்ஸ் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த எண்ணெய் ஒற்றைத் தலைவலியையும் நரம்பு வலியையும் போக்கும் தன்மையுடையது. பரங்கிக்காய் சாறு கல்லீரல் மற்றும் சிறுநீரகத்துக்கு பலம் தருவது.

சிறுநீரகக் கற்களால் பாதிப்பபடைந்தவர்களும், பித்தப் பையில் கோளாறு உடையவர்களும் தினம் மூன்று வேளை என பரங்கிக்காய் சாற்றை அரை டம்ளர் அளவு சுமார் 10 நாட்கள் பருகுவதால் சிறுநீரக மற்றும் பித்தப்பைக் கோளாறுகள் தணியும். பரங்கிச்சாறு ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பைப் போக்கக் கூடியது. இதனால் நோய்கள் தவிர்க்கப்படுவதோடு மாரடைப்பும் தடுக்கப்படுகிறது.

பரங்கிச்சாறு மலச்சிக் கலைப் போக்கக் கூடியது மட்டுமின்றி சீரணத்தை தூண்டக் கூடியது. பரங்கிச் சாறு அமிலச்சத்தினைக் குறைக்கக் கூடியது. புண்களை (அல்சர்) ஆற்றக்கூடியது. இது சிறு நீரகத்தையும், சிறு நீர்ப்பாதையையும் சீர் செய்யக் கூடியது.

பரங்கிச் சாறு லேசான மயக்க மூட்டும் தன்மையை பெற்றுள்ளது. இதனால் தூக்கமின்மையைப் போக்க வல்லது. ஒரு டம்ளர் பரங்கிச் சாற்றோடு சிறிது தேன் கலந்து சாப்பிடுவதால் தூக்கம் தூண்டப்படுகின்றது.

பரங்கிச் சாற்றில் பெக்ட்டின் என்னும் வேதிப் பொருள் அடங்கியுள்ளதால் இதைக் குடிப்பதனால் கொழுப்புச் சத்தினைக் குறைக்க உதவுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் தீய விளைவுகளினின்று பாதுகாப்பைப் பெற இயலுகிறது.

பரங்கிச் சாற்றோடு சிறிது தேன் கலந்து சாப்பிடுவதால் சிறந்த உடலுக்கு குளிர்ச்சி தரும் பானமாக அமைகிறது. இதனால் உடல் உஷ்ணம் தணிந்து போகின்றது.

கல்லீரலைப் பற்றிய நுண் கிருமியான வைரல் ஹெப்பாட்டிடிஸ் – ஏ வைப் போக்கக் கூடியது. இதனால் கல்லீரலின் செயல்பாடுகள் மேன்மை அடைகின்றன. பரங்கிச் சாற்றில் அடங்கியிருக்கும் விட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்குத் தந்து பல்வேறு நோய்களினின்று பாதுகாப்பைத் தருகிறது.

பரங்கிச் சாற்றிலுள்ள விட்டமின்களான ‘ஏ’, ‘சி’ மற்றும் ‘ஈ’ மேலும் துத்தநாகம் ஆகியன கொப்புளங்கள், கட்டிகள், வீக்கங்கள், வண்டுக்கடி ஆகியவற்றினின்று சீக்கிரத்தில் குணமடையச் செய்கின்றன.

பரங்கிச் சாற்றை தலைக்குத் தடவி வைத்திருந்து குளிப்பதால் தலைமுடி கொட்டுவது தவிர்க்கப்படுகின்றது.

sambalpoosani - 2026

உடலைப் பலப்படுத்தும் தன்மை கொண்டவை.

????நரம்புத் தளர்ச்சி மற்றும் வயிற்றுப் புண்கள், வயிற்று எரிச்சல், பித்த நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை சாம்பல் பூணிக்கு உண்டு.

????உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது.

????திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்கிவிடுகிறது.

????உடலின் வெப்பம் தணியவும் சாம்பல் பூசணி பயன்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.