ராஜஸ்தான் ஸ்பெஷல்: பியாஸ் கி கட்சோரி!

katchori - 2026

பியாஸ் கி கட்சோரி

தேவையானவை:
மைதா மாவு – ஒரு கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

ஸ்டஃபிங் செய்ய:
நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -2 டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன்
கடலை மாவு – 2 டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை – 1
வெங்காய விதை – ஒரு டீஸ்பூன்
அல்லது (விருப்பத்துக்கேற்ப)
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் பொரிக்க – தேவையான அளவு

செய்முறை:
மைதா மாவுடன் நெய், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து, சிறிது நேரம் மாவை பிழிந்த ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் சோம்பு, வெங்காய விதை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.

பிறகு, நறுக்கிய பச்சை மிளகாய், கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், பிரிஞ்சி இலை, கொத்தமல்லித்தழை, கடலை மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். பின்னர் கலவையில் இருந்து பிரிஞ்சி இலையை நீக்கிவிட்டால் ஸ்டஃபிங் ரெடி.

பிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரு உருண்டை எடுத்து உள்ளங்கையில் வைத்து நன்கு உருட்டவும். பிறகு, சப்பாத்தி கட்டையில் வைத்து மாவை நான்கு விரல்களால் நன்கு தட்டவும். உள்ளங்கையில் வைத்து குழிவாக்கி நடுவே ஸ்டஃபிங்கை வைத்து வெளியில் வராதபடி மூடவும். பிறகு, சப்பாத்தி கட்டையில் மீண்டும் வைத்து கைகளால் தட்டவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தட்டியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories