சிறப்பா செய்யுங்க இந்த பருப்பு பணியாரம்!

Published:

Screenshot 2020 0806 164100 - 2026

பருப்பு பணியாரம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 50கி (1 கப்)

இட்லிஅரிசி – 50கி (1 கப்)

உளுந்து – ¼ கப் (25கி)

கடலைபருப்பு – ½ கப் (50கி)

கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய், உப்பு. – தேவையான அளவு

சமையல் சோடா. – ¼ டீஸ்புண்

பச்சை மிளகாய், வெங்காயம். – 2

பெருங்காயம் – ¼ டீஸ்பூன்

செய்முறை:

பச்சரிசி, இட்லி அரிசி, உளுந்து, கடலை பருப்பு இவை அனைத்தையும் 3 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

அதை நொறு நொறு என்று அரைத்து இட்லி மாவு பாதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பல்லாரி (அ) சின்ன வெங்காயம், , கருவேப்பில்லை, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

அதை மாவில் கலந்து கொள்ளவும், அத்துடன் உப்பு, பெருங்காயம், கொத்தமல்லி, சமையல் சோடா சேர்த்து கலக்க வேண்டும். மாவு கலவை தயார் ஆகிவிட்டது.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

பணியார சட்டியில் எண்ணெய்யை தடவி அதில் மாவுயை ஊற்றி வேண்டும். தட்டை போட்டு மூடி வைக்கவும்.

ஒரு சிறு துளிகள் நேரம் கழித்து பணியாரத்தை புரட்டி போட வேண்டும்.

மறுபடியும் சுற்றி எண்ணெயை ஊற்றி இருபுறமும் வேக விடவும். சுவையான பருப்பு பணியாரம் தயார் ஆகிவிட்டது.

பருப்பு பணியாரத்துடன் (Dal Paniyaaram) தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் வடைபோல் இருக்கும்.

Related articles

Recent articles

spot_img