கனவின் விளைவு: நெருப்பைக் கண்டால்..!

madhurai fire 3 - 2026

அடிக்கடி நீங்கள் நெருப்பை கனவில் கண்டால் மிகுந்த கோபம் கொண்டவராக இருப்பீர்கள். நோய்களால் அவதிப்படுபவர்களுக்கும் அடிக்கடி நெருப்பு கனவு வந்துகொண்டிருக்குமாம்.

நெருப்பு சிறிய சுடராக உங்கள் கனவில் வந்தால் உங்கள் வாழ்க்கையில் செல்வா செழிப்புகள் ஏற்படும். பொருள்சேர்க்கை உண்டாகும்.

நெருப்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால் உங்களுக்கு ஏற்படும் கோபத்தால் இருக்கும் நல்ல வாய்ப்புகளை நழுவ விடுவீர்கள் என அர்த்தம்.

உங்களை சுற்றி நெருப்பு எரிவது போல கனவு கண்டால் உங்கள் உடலில் இருக்கும் நோய்கள் குணமாகும் என அர்த்தம்.

தீபத்தை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் உங்களுடைய உடல் நலம் சிறப்பாக ஆரோக்கியமாக மாறும் என அர்த்தம்.

நீங்கள் தீயை மிதிப்பது போல கனவு கண்டால் மிகப்பெரிய ஒரு சிக்கலில் நீங்கள் மாட்டி கொள்ள போகிறீர்கள் என அர்த்தம்.

தீ பிடித்து எரிவது போல கனவு கண்டால் ஏதோ தீய செய்திகள் உங்களை வந்து சேரும் என அர்த்தம்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

உங்களுடைய உடலில் நெருப்பு பற்றி எரிவது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு நெருங்கியவர்களுக்கு துன்பம் ஏற்படும் அறிகுறி.

கன்னி பெண் எரிவது போல கனவு கண்டால் சுபசெய்திகள் வந்து சேரும். மனதில் சந்தோசம் குடிகொள்ளும் என அர்த்தம்.

வேட்டியில் நெருப்பு பட்டு எரிவதை போல கனவு கண்டால் நீங்கள் செய்யும் வேலையில் கவனக்குறைவாக இருந்து பிரச்சனைகள் ஏற்படும் என அர்த்தம். வீட்டில் இருக்கும் பெண்கள் அல்லது மனைவிக்கு பிரச்சனைகள் ஏற்படும்.

புகையில்லாமல் நெருப்பை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் உங்கள் நோய்கள் நீங்கும். நோயில்லாமல் இருந்தால் திடீர் வரவுகள் கிடைக்க வாய்ப்புண்டு.

நெருப்பு புகையுடனும், புகை இல்லாமலும் எரிந்து கொண்டிருந்தால் துக்க சம்பவங்கள் நடைபெறும்.

நீங்கள் பார்க்கும் எல்லா இடமும் நெருப்பு எரிவதாக அல்லது உங்கள் ஊர் எரிவதாக கனவு கண்டால் பஞ்சம் ஏற்படும்.

தானிய மூட்டைகள் எரிவது போல கனவு கண்டால் பெருமழையால் நஷ்டங்கள் ஏற்படுமாம். நெருப்பிலும் தானியங்கள் எரியாமல் அப்படியே இருப்பதை போல கனவு கண்டால் நல்ல யோகம் கிடைக்கும்.

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

உங்களுடைய விரல் எரிவது போல கனவு கண்டால் நீங்கள் செய்யும் காரியங்களில் பிரச்சனைகள் ஏற்படும்.

நீங்கள் கப்பலில் பயணம் செய்யும் பொழுது தூரத்தில் தீபம் எரிவது போல கனவுகண்டால் உங்கள் வாழ்க்கை முழுவதும் கஷ்டமில்லாமல் இருக்கும்.

தீபம் நன்றாக எரிவது போல கனவு கண்டால் எல்லா பலன்களும் கிடைக்கும்.

தீபம் மங்கி எரிவது போல கனவு கண்டால் நோய் நொடிகள் ஏற்படும் என அர்த்தம்.

தீபத்தை பிடித்திருப்பது போல கனவு கண்டால் ஆபத்துகள் நீங்கி உற்றார், உறவினர்களின் உதவிகள் கிடைக்கும் என அர்த்தம்.

தோன்றும்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories