இந்தோனேசியாவில் தீவிர வாதத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு தேசப்பற்று மார்க்கம் – இஸ்லாம் நுஷந்தரா. இந்திய முஸ்லிம்கள் இஸ்லாம் நுஷந்தரா மாதிரியை பின்பற்ற வேண்டும் அப்படி செய்தால் தற்போது இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் களையப்பட்டு மற்ற சிறுபான்மையர்களுடன் நல்லிணக்கம் ஏற்பட்டு நாட்டில் ஒற்றுமை உணர்வு மேம்படும். இதற்கு முதலில் இஸ்லாம் நுஷந்தரா என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம் .
இஸ்லாம் நுஷந்தரா என்பது இஸ்லாமின் மாறுபட்ட வடிவாகும். இது 2015இல் இந்தோனேசியாவில் இஸ்லாமிய அறிஞர்கள் குழுவால் வடிவமைக்கப்பட்டது. ISIS தீவிரவாதமயமாக்களை எதிர்கொள்ளும் சக்தியாக இது உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய குறிக்கோள் என்னவென்றால் தேசிய ஒருமைப்பாட்டை காப்பது, இஸ்லாமியத்தின் மிதவாத மதிப்புகளை உயர்த்திப்பிடிப்பது, மற்றும் ஒரு நாட்டின் கலாச்சார மற்றும் அரசியல் அம்சங்களில் தலையிடாமல் இருப்பதாகும்.
இது இஸ்லாத்தின் தீவிர போதனையான ஜிஹாத் என்ற கருத்தை மறுக்கிறது. இந்த இஸ்லாத்தின் சீர்திருத்திய வடிவம் நாஹத்லதுல் உலமா எனும் அறிஞர்கள் குழுவின் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது, மேலும், இவர்கள் இந்தோனேசியா அரசாங்கத்துடன் சேர்ந்து செயல்படுகிறார்கள். இதன் மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதில் நாட்டுப்பற்று மதத்தின் ஒரு அங்கமாக போதிக்கப்படுகிறது. இது உம்மத் கொள்கைக்கு எதிராக உள்ளது.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களும் இந்தோனேசிய இஸ்லாமியர்களை போல இஸ்லாம் நுஷந்தராவை பின் பற்றி, நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் தீவிர வடிவில் உள்ள இஸ்லாம் மாதிரியை கைவிடவேண்டும்.
அடிப்படைவாத அமைப்பான PFI இஸ்லாத்தின் திரிக்கப்பட்ட வடிவை ஊக்குவித்து நாட்டிற்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுகிறது. இளைஞர்களை இஸ்லாம் மூலம் பிரிவினைவாத சக்தியாக மாற்றுகின்றது. இஸ்லாம் என்பது அனைவரையும் உள்ளடக்கிய மதம். ஆனால், இதற்கு நேர் எதிராக PFI போதிக்கிறது.
இஸ்லாம் நுஷந்தரா நம்பிக்கைகள் உலகளாவிய மதம் என்பதை தவிர்த்து நாட்டுப்பற்றையும் மதத்துடன் இணைப்பதால் தீவிரவாத சித்தாந்தத்தின் வாய்ப்பு குறைகிறது. உதாரணமாக இன்றைக்கு இந்தோனேசியா மதராஸாக்கள் மிதமான தன்மையுடன் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் Bahtsul Masail model ஐ அவர்களது ஃபிக் கல்விமுறை பயன்படுத்துவதால் தான்.
இந்த கற்றல் மாதிரியானது இந்தோனேசியா முஸ்லிம்கள் தங்கள் உள்ளுர் முறையில் ஃபிக் படிக்க உதவுகிறது. இது இந்தியாவிலும் தேவைப்படும். சூபி கலாச்சாம் பல கருத்துக்களை பக்தி கலாச்சாரத்தில் இருந்து ஏற்றுக்கொண்டிருக்கிறது, அதனால் தான் ஒத்திசைவு கலாச்சாரம் உண்டாகியது.
இந்தோனேசியா, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடு, சிறிய அளவில் உள்நாட்டு பிரச்சினைகள் இருப்பினும் இஸ்லாமியத்தின் தாக்கம் உள்ள நாடு. இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு அதனால் இஸ்லாம் நுஷந்தராவை பின்பற்றுதல் கடினம். இருப்பினும் இந்தியாவிற்கு ஏற்றமாதிரி இஸ்லாம் நுஷந்தராவை வடிவமைக்கலாம். ஏனெனில் இருநாட்டிலும் இஸ்லாமிய தீவிரவாதம் இருக்கிறது.
அண்மையில் உதய்பூரில் நடந்த சம்பவம் போலவே இந்தோனேசியாவிலும் மதவாத பிரச்சனைகள் 90களில் இருந்தது. இதை தீர்க்க அனைத்து தரப்பிரனரும் மதத்தினரும் ஒன்று சேர்ந்து, ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளின் மூலம் உருவாக்கப்பட்டது தான் இஸ்லாம் நுஷந்தரா.
இந்தோனேசியா வை ஒரு உதாரணமாக எடுத்துக்கொண்டு இந்திய கலாச்சாரத்துக்கு ஏற்ற வகையில் இஸ்லாம் நுஷந்தராவை வடிவமைத்து மதத்தை அன்பின் இருப்பிடமாக, சகோதரத்துவமிக்க மற்றும் நல்லிணக்க அடையாளமாக மாற்ற வேண்டும்.
சூஃபி கலாச்சாரத்தில் கூறியது போல வெறுப்புணர்சியை அன்பின் மூலமாக மட்டுமே கட்டுப்படுத்த முடியும் , இஸ்லாம் நுஷந்தராவும் இந்த அன்பைதான் அனைவருள்ளும் விதைக்கிறது. அண்மையில் பாட்னாவில், ஃபுல்வாரிஷரிப் எனும் இடத்தில் PFI சேர்ந்த ஒருவர் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற ஒரு செயல் திட்டத்தினை முன்மொழிந்த காரணத்தால் கைது செய்யப்பட்டார்.
இந்நிகழ்வு நமக்கு உணர்த்துவது என்னவென்றால் நம் நாட்டில் தீவிரவாத்தின் விஷம் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது, இதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலமே தீவிரவாத சக்திகளிடமிருந்து நம் நாட்டை காப்பாற்ற முடியும்.