அரவக்குறிச்சி பேரூராட்சி கரடிபட்டி அருள்மிகு வெற்றி விநாயகர் மற்றும் அருள்மிகு முத்தாலம்மன் ஆலய கும்பாபிஷேகம் மற்றும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட தலைவர் வி.வி. செந்தில்நாதனுக்கு ஊர் பொது மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது மாவட்ட பொது செயலாளர்கள் கோபிநாத், ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன், பேரூர் பாஜக தலைவர் நகுலன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் பழனிச்சாமி, அமைப்பு சாரா பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடாச்சலம், தொழில் துறை பிரிவு சீனிவாசன், ஒன்றிய பொது செயலாளர் சங்கர் கணேஷ், ஒன்றிய துணை தலைவர்கள் சித்தாமலை, சக்திவேல், ஒன்றிய செயலாளர் ரஞ்சித் உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.