vivekananda ashram sengottai - 2026

செங்கோட்டையில் சுவாமி விவேகானந்த ஆசிரம முப்பெரும் விழா!

நெல்லை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
vivekananda ashram sengottai - 2026

செங்கோட்டை சேனைத்தலைவா் சமுதாய நலக்கூடத்தில் வைத்து திருக்குற்றாலம் சுவாமி விவேகானந்தா ஆசிரமம் சார்பில் ஸ்ரீசாரதா ஆசிரமத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா, ஸ்ரீசுவாமி விவேகானந்த ஆசிரமத்தின் 35வது ஆண்டு விழா, ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் 125வது ஜெயந்திவிழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

விழாவிற்கு பெருங்குளம் செங்கோல் ஆதினம் 103வது ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீசிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் தலைமைதாங்கினார். தொழிலதிபர்கள் பொறியாளா் லிங்கராஜ், சா மில் உரிமையாளா்கள் லால்ஜீபடேல், மோகன்படேல், சீவ்கன்படேல், காந்தி சேவா மைய நிர்வாகி இராம்மோகன் ஆகியோர் முன்னிலைவகித்தனா்.

vivekananda ashram sengottai2 - 2026

ஆசிரம மாணவியா்கள் இறைவணக்கம் பாடினா். தென்காசி திருவள்ளுவா் கழக செயலா் சிவராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். செங்கோட்டை காந்தி சேவா மைய நிறுவனா் விவேகானந்தன், திருக்குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லுாரி முதல்வா் ஜெயநிலாசுந்திரி, மணிமேகலை மன்றம் பொதுச்செயலாளா் கோதண்டம், செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளளா் இராணிஇராம்மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.

சின்னமனுார் ஸ்ரீஇராமகிருஷ்ண ஆசிரமம் ஸ்ரீமத்சுவாமி முக்தானந்தஜீ, திண்டுக்கல் ஸ்ரீஇராமகிருஷ்ண ஆசிரம தலைவா் ஸ்ரீமத்சுவாமி நித்யசத்வானந்தஜீ, சங்கரன்கோவில் அன்னபூரணாபுரம் ஸ்ரீஇராமகிருஷ்ணா தவக்குடில் தலைவா் ஸ்ரீமத்சுவாமி ராகவானந்தஜீ ஆகியோர் அருளுரை வழங்கினா்.

அதனை தொடா்ந்து ஆசிரம மாணவ, மாணவியா்கள், ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவியா்கள் தென்காசி அன்னை கலை அகடமி மாணவர்கள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம், நாடகம், நடந்தது.

vivekananda ashram sengottai1 - 2026

முன்னதாக பள்ளிகளில் நடத்தப்பட்ட பேச்சுபோட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு சமூக ஆர்வலா்கள் பிரபாமுரளி, ரமீலாமோகன்படேல், சந்திரிகாதிலீப்படேல், கான்கதாலலித்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினா். பின்னா் ஆதரவற்ற தாய்மார்கள் சுமார் 50பேருக்கு ஆடைகள் வழங்கப்பட்டது.

5 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது, இதனையடுத்து சுவாமி விவேகானந்தா ஆசிரம ஸ்ரீமத் சுவாமி அகிலானந்தஜீ, ஆத்மபிரியா மாதாஜீ ஆசியுரை வழங்கினா்.

நிகழ்ச்சியில் விவேகானந்தா கேந்திர மாவட்ட பொறுப்பாளா் கருப்பசாமி, கேந்திர தொண்டா்கள் கோமதிநாயகம், பாலகிருஷ்ணன், ஐயப்பன், நகர்மன்ற உறுப்பினா்கள் பொன்னுலிங்கம்(எ)சுதன், செண்பகராஜன் பொதுமக்கள், சமூக ஆர்வலா்கள், உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் செங்கோட்டை சமூக ஆர்வலா் கல்யாணகுமார் நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.